பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை சுற்றுலா திட்டம்; மாணவர்களிடம் ஆர்வம்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பண்ணை சுற்றுலா திட்டம்; மாணவர்களிடம் ஆர்வம்

சென்னை : தோட்டக்கலை துறையின், பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு, பள்ளி மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது.

உணவு பொருட்களை உற்பத்தி செய்ய, விவசாயிகள் கடுமையாக உழைக்கின்றனர். இருப்பினும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள், ஆடம்பரம் என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றன.எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைய தலைமுறையினருக்கு விவசாயம் கற்று தருவதற்கும், தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில், பண்ணை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இங்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, விவசாயம் குறித்தும், ஊட்டசத்துள்ள உணவுப் பொருட்கள் குறித்தும், தோட்டக்கலை அதிகாரிகள், நாள் முழுவதும் பாடம் கற்பிக்கின்றனர்; செயல்முறை விளக்கமும் வழங்கப்படுகிறது. தற்போது, பண்ணை சுற்றுலா திட்டம், சென்னை, மாதவரத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் பிரபலமடைந்துஉள்ளது.

பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இங்கு வந்து, விவசாய தொழில் நுட்பங்களை கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திட்டம் வெற்றி அடைந்துள்ளதால், தோட்டக்கலை துறையினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
11-டிச-201918:41:35 IST Report Abuse
Gopi நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X