அரசு ஊழியர் கொலை வழக்கு: 5 பேர் கைது| Dinamalar

அரசு ஊழியர் கொலை வழக்கு: 5 பேர் கைது

Added : டிச 11, 2019

புதுச்சேரி:பழிக்கு பழியாக அரசு ஊழியரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
குருசுகுப்பத்தை சேர்ந்தவர் லோகு (எ) லோகநாதன்,52; பொதுப்பணித்துறை ஊழியரான இவர், கடந்த 8ம் தேதி காலை கோவிலுக்கு சென்றபோது, மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காங்., பிரமுகர் பாண்டியன் கொலைக்கு, பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில், பாண்டியன் தாய் மல்லிகா, சகோதரி பிரபா, மகன் கோகுல் உள்ளிட்ட 10 பேர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில் கோகுல், அருள்பாண்டி, சதிஷ், வாசு (எ) ராமு, குணா ஆகியோரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். மற்றவர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், அரசு ஊழியர் கொலை வழக்கு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். மேலும், தலைமறைவான குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X