வெங்காயம் விலை உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : டிச 11, 2019
Advertisement
 வெங்காயம் விலை உயர்வு  மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:வெங்காயம், பருப்பு விலை உயர்வை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், இடதுசாரி அமைப்புகள், வரும் ஜன., 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், வெங்காயம் மற்றும் பருப்பு விலையை கட்டுப்படுத்தி மானிய விலையில் அரசே வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகை உடனே வழங்க வேண்டும், அரிசிக்கு பதிலாக பணம் தருவதை கைவிட்டு, மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என, வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில், புதுச்சேரி அமுதசுரபி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலர் ராஜாங்கம், தமிழ்மாநில குழு முருகன், நிர்வாகிகள் நடராஜன், அழகர்ராஜ், அருள்மணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X