4 முதல் 40 வரை பலாத்காரம் : தாய்மாமனிடம் துவங்கியது விசாரணை

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 4 முதல் 40 வரை பலாத்காரம் :  தாய்மாமனிடம் துவங்கியது விசாரணை

புதுடில்லி : உறவுக்கார பெண்ணை, 4 வயதில் இருந்து, 40 வயது வரை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய நபர் மீது, டில்லி நீதிமன்றம் விசாரணையை துவக்கி உள்ளது.


விசாரணை


டில்லியை சேர்ந்த, 40 வயது பெண், தன் சொந்த தாய்மாமன் மீது, 2016ல், பாலியல் புகார் அளித்தார். அவர் மீது போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், அந்த வழக்கு, டில்லி நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:எனக்கு, 4 வயது இருக்கும்போது, 1981ல், என் தாய்மாமாவால், நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன்.

நான், 10ம் வகுப்பு படித்து முடிப்பதற்குள், எனக்கு மூன்று முறை கருகலைப்பு செய்யப்பட்டது. அதற்கு, என் தாய்மாமா தான் காரணம்.இதுபற்றி, என் குடும்பத்தினரிடம் கூறியும், அனைவரும் அவருக்கு ஆதரவாக பேசினர். இந்நிலையில், என் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் தாய்மாமா, எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார்.எனக்கு திருமணமாகி, 2014ல் விவாகரத்து ஆனது. அதுவரை, எனக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தார். இப்போது, என்னை கொன்றுவிடுவதாக, மிரட்டுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் மீது, நீதிமன்றம் விசாரணையை துவக்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-டிச-201912:32:02 IST Report Abuse
Lion Drsekar சட்டம் இயற்றுபவர்கள் தங்கள் பதவி, சம்பளம், பென்சன் , தங்களின் தொழில் இவைகளில் மட்டுமே,,,,,,, இது போன்ற சமூக விராடலுக்கு எதிராக எந்த ஒரு சட்டமும் இயற்றாததோ அல்லது கடுமையான தண்டனையோ கொடுக்காத காரணம் ??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-டிச-201911:52:08 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொலை செய்ரதுக்கு முன்னாடி அவனுடையந்த பார்ட்லே அசீட் கொட்டி அலறவிட்டுட்டு துடிக்கவச்சு சாவடிக்கவேண்டும் பாம்வச்சு கொல்லுங்களேன் தப்பே இல்லீங்க இனிமேல் ரேப் னு எவன் செய்தாலும் நோ கேசு கோர்ட்டு உடனே கொலைதான் செய்யவேண்டும் எவனாயிருந்தாலும் மந்திரிலேந்து மண்ணாங்கட்டிவரை இதுவேதான் தண்டனை
Rate this:
Share this comment
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
15-டிச-201906:16:32 IST Report Abuse
chandkec 2016 எங்கே... 2019 எங்கே.. வெத்து வெட்டு பசங்க ஆட்சி...நாடு நாசமா போகட்டும்.ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X