சபரி மலை செல்லும் வழியில் ஐயப்ப பக்தர் மயங்கி விழுந்து பலி

Added : டிச 11, 2019
Advertisement

கண்டமங்கலம்:கண்டமங்கலத்தில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் சக பக்தர் மயங்கி விழுந்து இறந்ததால், 20 பேரும் மாலையை கழற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.
கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனுாரை சேர்ந்தவர் மணிகண்டன்,45; சபரிமலைக்கு மாலை அணிந்த இவர், கடந்த 7ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 20 பேருடன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். நேற்று முன்தினம் பகல் 1:00 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்குறுங்குடி அருகே சென்றபோது மணிகண்டன் திடீரென மயங்கி விழுந்தார்.உடன் அவரை, சக பக்தர்கள் அருகில் உள்ள அரசு சமுதாய நல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.அதனையடுத்து, அனைவரும் மாலையை கழற்றிவிட்டு, மணிகண்டன் உடலுடன், சொந்த ஊர் திரும்பினர். அவரது உடல் நேற்று மாலை 4.00 மணிக்கு சொந்த ஊரான பள்ளிநேலியனுாரில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X