செயின் பறிப்பு வாலிபர் கைது

Added : டிச 11, 2019
Advertisement

புதுச்சேரி:வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், தங்க செயினை பறிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம், ஜமீத் நகரைச் சேர்ந்தவர் முகமது அஜி மனைவி சகாமா,28; கடந்த 3ம் தேதி மதியம் சகாமா வீட்டில் தனியாக இருந்தபோது, முகவரி கேட்பது போல் வீட்டிற்குள் வந்த வாலிபர், சகாமா அணிந்திருந்தஒன்றரை சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சிற்காக காத்திருந்த பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரகு மகன் சத்தியராஜ்,20; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X