மாணவர் போராட்டத்தால் பெரோஸ் கான் ராஜினாமா

Added : டிச 11, 2019
Advertisement

வாரணாசி : மாணவர்களின் எதிர்ப்பால், பனாரஸ் ஹிந்து பல்கலையின், சமஸ்கிருத துறை துணைபேராசிரியர் பெரோஸ் கான், தன் பணியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், அதே பல்கலையில், கலை, இலக்கிய துறையில், அவர் சமஸ்கிருதப் பாடம் போதிக்க உள்ளார்.

உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பனாரஸ் பல்கலையில், சமஸ்கிருத துறை துணைபேராசியர் பதவிக்கு நேர்காணல் நடந்தது. அதில் பங்கேற்ற, எட்டு பேரில், பெரோஸ்கான், முதலிடத்தை பிடித்தார். எனவே, அவரை, பனாரஸ் பல்கலை நிர்வாகம்,சமஸ்கிருத துறை துணை பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்தது. இதற்கு, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'சமஸ்கிருத பாடத்தை ஒரு ஹிந்து தான் போதிக்க வேண்டும்' என, அவர்கள் போராட்டம் நடத்தினர். எனினும், பல்கலை நிர்வாகம் அளித்த ஆதர வால், பெரோஸ் கான் பணியைத் தொடர்ந்தார். இருந்தபோதிலும், மாணவர்களின் புறக்கணிப்பு போராட்டத்தால், அவரால் பாடம் போதிக்க முடியவில்லை. இந்நிலையில், பெரோஸ் கான், சமஸ்கிருதத் துறை துணை பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

'அவர், கலை இலக்கிய துறையில், மாணவர்களுக்கு சமஸ்கிருதம் போதிப்பார்' என, பனாரஸ் பல்கலையின், சமஸ்கிருத துறை தலைவர், பிந்தேஸ்வரி பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X