கேரளாவில் 9 மாதங்களில் 1,500 பலாத்காரங்கள்

Added : டிச 11, 2019
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில், இந்தாண்டு முதல் ஒன்பது மாதங்களில், 1,537 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில போலீஸ் குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி, இந்தாண்டில், செப்., வரையிலான, ஒன்பது மாதங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 10 ஆயிரத்து, 516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், 1,537 வழக்குகள், பாலியல் பலாத்காரம் தொடர்பானவை. கடந்தாண்டு, 2,015 பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த, 2016ல், 1656; 2017ல், 2003 பலாத்கார வழக்குகள் பதிவாகின.இந்தாண்டில் பதிவான, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில், 3,351 வழக்குகள், பாலியல் தொந்தரவு தொடர்பானவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X