குற்றவாளிகளை தூக்கில் நிறைவேற்ற திஹார் சிறை தயார்

Added : டிச 11, 2019
Advertisement

புதுடில்லி : மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி திஹார் சிறை நிர்வாகம் தயாராக உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது.தெற்கு டில்லியின் முனிர்காவில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, நிர்பயாவை, ஆறு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரை துன்புறுத்தியதுடன், சாலையில் துாக்கி வீசியது. இதில் அந்த மாணவி, உயிரிழந்தார். கடந்த, 2012ல் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.'என்கவுன்டர்'இது தொடர்பாக, ஆறு பேர் மீதும், பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அதில், ராம் சிங் என்பவர், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிறுவன் மீது, சிறுவர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.அவரை, மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தர விடப்பட்டது. தண்டனை முடிந்து அவர் வெளியேவந்துள்ளார்.மற்ற குற்றவாளிகளான, முகேஷ் சிங், 30; வினய் சர்மா, 24; பவன் குமார் குப்தா, 23;அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை, 2014ல் டில்லி உயர் நீதிமன்றமும், 2017ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. சமீபத்தில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் அவருடைய உடல் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, நான்கு பேர், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது நடந்த, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கும் உடனடியாக தண்டனை நிறைவேற்ற வேண்டும் என, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கருத்துதெரிவித்தனர்.இந்த நிலையில், இவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு, திஹார் சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பீஹார் மாநிலம், பக்சார் சிறையில் இருந்து, 10 துாக்குகயிறுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறை எண் - 2ல், தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


ஊழியர்கள் இல்லை


திஹார் சிறையில், 'ஹேங்மேன்' எனப்படும், தண்டனை நிறைவேற்றும் ஊழியர்கள் இல்லை. அதையடுத்து, மற்ற சிறைகளின்உதவியை, திஹார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.மிக விரைவில், தண்டனையை நிறைவேற்று வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முகேஷ் சிங், அக் ஷய் ஆகியோர், திஹார் சிறையின், 2வது எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வினய் சர்மா, நான்காவது எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மண்டோலி சிறையில் இருந்த பவன் குமார் குப்தாவும், திஹார் சிறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டு, சிறை எண் - 2ல்அடைக்கப்பட்டுள்ளார்.சீராய்வு மனுநிர்பயா வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட, நான்கு பேரில், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர், ஏற்கனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைதாக்கல் செய்தனர்.

அவற்றை, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான அக் ஷய் குமார் சிங், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை, நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X