சமுதாய நலக்கூடம் சூறையாடல் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Added : டிச 11, 2019
Advertisement
 சமுதாய நலக்கூடம் சூறையாடல்  போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

புதுச்சேரி:சமுதாய நலக்கூடத்தை சூறையாடிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டாதல் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி கோவிந்த சாலை கண்டாக்டர் தோட்டத்தில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இதில், அப்பகுதி மக்கள் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி ரவுடிகள் அவ்வப்போது, சமுதாய நலக்கூடத்தில் புகுந்து, சிறுவர்களை விரட்டிவிட்டு, மதுகுடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை சமுதாய நலக்கூடத்திற்கு வந்த ரவுடிகள் அங்கிருந்த சிறுவர்களை விரட்டியதுடன், டியூப் லைட் மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனைக் கண்டு ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள், சமூதாய நலக்கூடத்தை சூறையாடிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X