பொது செய்தி

தமிழ்நாடு

லண்டன் போலீசில் சிக்கிய நடிகை ஸ்ரேயா

Added : டிச 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
லண்டன் போலீசில் சிக்கிய நடிகை ஸ்ரேயா

சென்னை : படப்பிடிப்புக்கு சென்ற நடிகை ஸ்ரேயா, லண்டன் போலீசில் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மாதேஷ் இயக்கும், சண்டக்காரி படத்தில், கணினி தொழில்நுட்ப நிறுவன அதிகாரியாக, ஸ்ரேயாவும், நாயகனாக, விமலும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, லண்டன் ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில், சமீபத்தில் நடந்தது. விமல், ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள், அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, குடியுரிமை பகுதியை கடந்து, ஸ்ரேயா சென்று விட்டார். உடனடியாக, அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார், ஸ்ரேயாவை சூழ்ந்தனர்.

'உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாமல், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது ஏன்' என, ஸ்ரேயாவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த விமல், அவரிடம் உள்ள உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்ததை, போலீசாரிடம் எடுத்துரைத்துள்ளார். பின், ஸ்ரேயாவை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவம், படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. நடிகை ஸ்ரேயாவுக்கு, கடந்தாண்டு திருமணம் நடந்ததால், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது, மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-டிச-201919:52:41 IST Report Abuse
Nallavan Nallavan அப்புறம் தப்பிக்க என பண்ணுனா ?? கண்டமனூர் கதையாயிருச்சா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X