சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆனைக்கொம்பனால்' விவசாயிகள் கலக்கம்

Added : டிச 11, 2019
Advertisement

சென்னை : ஆனைக்கொம்பன் ஈக்கள் அச்சுறுத்தலால், சம்பா பருவ நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும், 30 லட்சம் ஏக்கருக்கு மேல், சம்பா பருவ நெல் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும், 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. இந்நிலையில், விட்டுவிட்டு பெய்யும் பருவமழை, அதை தொடர்ந்து அதிகரிக்கும் வெயில் காரணமாக, தட்பவெப்ப நிலை மாறியுள்ளது. இதனால், ஆனைக்கொம்பன் ஈக்கள் எனப்படும், ஒரு வகை பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை, வளர்ந்து வரும் சம்பா பருவ நெல் பயிர்களை தாக்க துவங்கியுள்ளன.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த ஆனைக்கொம்பன் ஈக்கள், மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக, கொசுவை போல இருக்கும். இந்த ஈக்கள், நெல் பயிரின் குருத்துக்களை துளைத்து விடும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த, தகுந்த ஆலோசனைகள் வழங்க, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். இதையடுத்து, ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், பயன்படுத்த வேண்டிய ரசாயன கொல்லி மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. வேளாண் அலுவலர்களின் வழிகாட்டுதல்படி, இப்பணியை, விவசாயிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X