சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளைக்காரிகளை பிடிக்க போலீசார் படாதபாடு

Added : டிச 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 கொள்ளைக்காரிகளை பிடிக்க போலீசார் படாதபாடு

சென்னை : சென்னையில், ஆட்டோவில் செல்லும் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, நகைகளை பறித்து வந்த, ஆந்திர கொள்ளைக்காரிகளை பிடிக்க, போலீசார் படாதபாடுபட்டுள்ளனர்.

சென்னை, பெரம்பூர், பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர், ஜூலியா ஜெயராஜ், 82. இவர், 3ம் தேதி, பெரம்பூர் சர்ச் சாலை வழியாக, ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார். இவருடன் பயணித்த, இளம்பெண்கள் மூவர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, 3 சவரன் நகையை பறித்தனர்.

சென்னையில், இதேபோன்று, 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால், புளியந்தோப்பு சட்டம் - ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, செம்மியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணிகுமார் இடம் பெற்ற தனிப்படை போலீசார், கொள்ளைக்காரிகளை தேடி வந்தனர்

சம்பவ இடங்களில் உள்ள, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளைக்காரிகளை அடையாளம் கண்டனர். சுற்றி வளைப்புபின், மாநில குற்ற ஆவண காப்பக போலீசார் உதவியுடன், கொள்ளைக்காரிகள், ஆந்திர மாநிலம், சித்துார் குப்பத்தைச் சேர்ந்த, அகிலா, 28; அலமேலு, 29; கனகா, 28 என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பரணிகுமார் ஆகியோர், சித்துார் குப்பம் பகுதியில், இளநீர் வியாபாரிகள் போல நடித்து, இரு தினங்களுக்கு முன், கொள்ளைக்காரிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, அகிலா மட்டும் சிக்கினார். உடனே, ஊர் மக்கள் அனைவரும், இன்ஸ்பெக்டர்களை சூழ்ந்துள்ளனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார் உதவியுடன் பல கட்ட பேச்சு நடத்தி, அகிலாவை பிடித்து வந்தனர்.

அகிலா அளித்துள்ள வாக்குமூலம்:எங்கள் ஊரிலுள்ள, அனைவருக்கும் திருடுவது தான் தொழில். ஊர் தலைவர்களாக, வேலு, சிவா ஆகியோர் உள்ளனர்.

மூன்று பங்கு

இவர்கள் திருடுவதற்கு பயிற்சி அளிப்பர். மூன்று இளம் பெண்கள் அடங்கிய குழுவாக, தமிழகம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வோம். அந்த மாநில மொழிகள் அனைத்தும், எங்களுக்கு அத்துப்படி.வாடகை ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, நகை பறிப்போம். ஆண்கள் வேட்டைக்கு செல்வது போல, பல ஊர்களுக்கு சென்று, தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து வருவர்.

எவ்வளது நகை சேர்ந்தாலும், மூன்று பங்கு போடுவோம். ஒரு பங்கு எங்களுக்கு, மற்றொரு பங்கு ஊருக்கு, மீதமுள்ள பங்கு, வேலு மற்றும் சிவாவுக்கு.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இவர் தந்த தகவல் அடிப்படையில், அலமேலு மற்றும் கனகாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
14-டிச-201910:53:14 IST Report Abuse
Ramalingam Shanmugam spg பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எங்களுக்கும்
Rate this:
Share this comment
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
13-டிச-201915:01:21 IST Report Abuse
அருண்நம்பி போன சனிக்கிழமை எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் எங்களோட மிதிவண்டி காணாமல் போய்விட்டது, சிசிடிவி காமெராவை ஆராய்ந்தால் பகல் மூன்று மணிக்கு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தன்னுடைய வண்டி போல எடுக்கிட்டு போறான் ஒரு ஆசாமி, ஆளை பார்த்தல் திருடன் என்று சொல்ல முடியாத அளவுக்கு உடை நடை காலம் எப்படி இருக்கு பாருங்க....
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
12-டிச-201913:27:28 IST Report Abuse
Varun Ramesh வி.வி.ஐ.பிக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாமா கூடாதா என்றெல்லாம் வாஸ்து உட்பட அனைத்தையும் ஆய்ந்து சொல்லுகிற இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட், ஊரே திருட்டுக்கும்பலாக இருப்பதை கண்டறியவே முடியாதா? அதற்கான தொழில்நுட்பம் இல்லவே இல்லையா? திருடர்களை விட்டுவிட்டு திருட்டு கொடுத்தவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை சொல்லும் யுக்தியை கைவிட்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X