சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ.,யினர் 67 பேர் கைது

Added : டிச 11, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் குடியுரிமை பாதுகாப்பு மசோதா நகலை எரிக்க முயன்ற இந்திய சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 67 பேரை போலீசார் கைது செய்தனர்.நாடாளுமன்றத்தில் குடியுரிமை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே நேற்று மாலை இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.,) சார்பில் நேற்று
 எஸ்.டி.பி.ஐ.,யினர் 67 பேர் கைது

கள்ளக்குறிச்சி:விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் குடியுரிமை பாதுகாப்பு மசோதா நகலை எரிக்க முயன்ற இந்திய சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 67 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே நேற்று மாலை இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.,) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியுரிமை பாதுகாப்பு மசோதா நகலை எரிக்க முயன்ற மாவட்ட தலைவர் மாலிக், பொருளாளர் யாசின் தலைமையிலான எஸ்.டி.பி.ஐ.,யினர் 15 பேரை இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வள்ளி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம்விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொதுச் செயலர் முகமது ரபி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். தலைவர் சாதிக்பாஷா, பொருளாளர் சான்பாஷா, துணை தலைவர் சாதிக், செயலர் சையது ஹசன் கண்டன உரையாற்றினர். இதையடுத்து, சட்ட நகலை எரிக்க முயன்ற நிர்வாகிகளை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, 52 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X