பொது செய்தி

இந்தியா

கோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019
Advertisement
IndvWI2ndT20I,IndvWI,India,இந்தியா,Kohli,கோஹ்லி,கோலி,Windies,cricket,mumbai

மும்பை: இந்தியா மற்றும் விண்டீஸ் அணிகள் மோதும், 3வது மற்றும் கடைசி 'டுவென்டி-20' போட்டி மும்பையில் இன்று(டிச.,11) நடக்கிறது. இதில் இந்தியா அசத்தும்பட்சத்தில் கோப்பையை கைபற்றலாம்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. பைனல் போன்ற மூன்றாவது போட்டி இன்று மும்பையில் நடக்கிறது.


சுதாரிப்பாரா ரோகித்:


இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தர முயற்சிக்க வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ரன் மழை பொழியும் ரோகித், கடைசியாக பங்கேற்ற 6 'டுவென்டி-20' போட்டிகளில் இரண்டில் தான் (9, 9, 85, 2, 8, 15) இரட்டை இலக்க ரன்களை எட்டினார். இன்று சொந்தமண்ணில் எழுச்சி பெற்றால் நல்லது.





'மிடில் ஆர்டரில்' தன்னை நிரூபித்த ஷிவம் துபே இன்று பின் வரிசைக்கு செல்லலாம். கோஹ்லி வழக்கமான இடத்தில் களமிறங்க காத்திருக்கிறார். இவருடன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுத்தால் மட்டுமே வெற்றிக்கு முயற்சிக்க முடியும். அணியின் பீல்டிங்கும் படு மந்தமாக உள்ளது. பல கேட்சுகளை நழுவ விடுவதால், வெற்றியும் கைநழுவுகிறது. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், தீபக் சகார் கூட்டணி துவக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதற்குப் பதில், ரன்களை அதிகமாக தருகின்றனர்.


குல்தீப் வாய்ப்பு


பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றும் 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு (கடைசி 5 போட்டியில் 3 விக்.,) நெருக்கடி அதிகரித்துள்ளது. இவர் வீசிய 23 ஓவரில் 144 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இவருக்கு பதில் குல்தீப் யாதவ் இடம் பெறலாம். சகால், ஜடேஜா எதிரணியின் சிக்சர்களை கட்டுப்படுத்த முயற்சித்தால் வெற்றி வசப்படும்.






மிரட்டல் பேட்டிங்


'டுவென்டி-20' உலக கோப்பையில் இரு முறை சாம்பியன் விண்டீஸ். தரவரிசையில் 10வது இடத்தில் இருந்தாலும் லீவிஸ், சிம்மன்ஸ், ஹெட்மயர், கேப்டன் போலார்டு என பலரும் சிக்சர் அடிப்பதில் வல்லவர்களாக உள்ளனர். இது ஸ்கோர் எளிதாக உயர வழி வகுக்கிறது. பவுலிங்கில் வில்லியம்ஸ், காட்ரெல், வால்ஸ் என பலரும் சிறப்பாக செயல்படுவதால் இந்திய வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டும். போட்டி இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X