குடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் அதிருப்தி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (26)
Advertisement
குடியுரிமை மசோதா, நிதிஷ் முடிவு, கட்சி, அதிருப்தி

புதுடில்லி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்க வழி செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.




இம்மசோதாவிற்கு தே.ஜ. கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி ஆதரவாக வாக்களித்தது.இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கு கட்சியின் மூத்த தலைவரான பிரசாந்த் கிஷோர், மற்றும் பவன் வர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாரபட்சமான மசோதா. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் நாம் இதனை நிச்சயம் ஏற்க முடியாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு இம்மசோதா எதிரானது என நிதிஷூக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-டிச-201915:47:09 IST Report Abuse
S.Baliah Seer இலங்கையும் அண்டை நாடுதான்.இந்தியாவிற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களும் மனிதர்கள்தான்.25 வருடங்களுக்கு மேலாக அவர்கள் அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள்.அவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
13-டிச-201912:42:18 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஅவர்களை தமிழர்களாக மட்டுமே பார்க்கும் மத்திய அரசு அதை ஒருபோது செய்யாது. இந்தியாவிலேயே தனிமை படுத்த பட்டுள்ள ஒரே இனம் தமிழினம்....
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
11-டிச-201912:59:50 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இப்படியே நடந்து கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் தோற்றுக் கொண்டே இருப்பீர்கள், இந்துக்கள் ஒன்று பட்டு வருவார்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்துக்களை ஒற்றுமை படுத்துவதற்கு நன்றி. காங்கிரஸ் காணாமல் போனது போல மற்ற கட்சிகளும் அப்போது தான் கரைந்து போகும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
11-டிச-201912:38:26 IST Report Abuse
Vivekanandan Mahalingam ரோஹிங்கியா முஸ்லிமை முஸ்லீம் நாடுகளே ஏற்று கொள்ளவில்லை துரத்துகிறார்கள். இந்தியா எதற்காக 1 கோடி ரொஹிங்கியாக்களை ஏற்று கொள்ள வேண்டும். முஸ்லீம் நாடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஹிந்து பௌத்த ஜைன வர்களுக்கும் மேலும் கிருத்துவர்களுக்கும் குடியுரிமை இந்த மசோதா அளிக்கிறது. நம்ம நாட்டில் திருட்டுத்தனமாக நுழைந்து நம்முடைய வேலையும் பறித்து நம்முடைய ரேஷன் பொருள்களையும் வாங்கி தின்று இங்கு கொலை கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் ரொஹிங்கியாக்களை இந்தியாவில் இருந்து துரத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X