பிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (13)
Advertisement
பிரதமர் மோடி. செய்தி 'கோல்டன் டுவீட்' ஆக தேர்வு

புதுடில்லி : பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தி, இந்தாண்டின், 'கோல்டன் டுவிட்' என்ற பாராட்டைப் பெற்றுள்ளது.

'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ஓராண்டில், மிக அதிகமானோரால் பேசப்பட்டு, மறுபகிர்வுசெய்யப்படும் செய்தி, 'கோல்டன் டுவிட்' என, பாராட்டப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து, பிரதமர் மோடி, மே, 23ல், டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, மிக அதிக அளவிலான மக்களை சென்றடைந்து, மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது.






அதில் 'அனைவரும் இணைந்து செயல்படுவோம்; சேர்ந்து வளம் காண்போம்; வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்; மீண்டும் இந்தியா வென்றுள்ளது' என, மோடி தெரிவித்திருந்தார். இந்த செய்திக்கு, ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து, மறுபகிர்வு செய்துள்ளனர். அதனால், இந்த செய்தி, 'கோல்டன் டுவீட்' ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையில், இந்திய கிரிக்கெட் கேப்டன், விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன், தோனிக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி, மிக அதிகமானோரால் பகிரப்பட்ட சிறப்பை பெற்றுள்ளது.
அற்புதமான, முக்கிய நிகழ்ச்சிகளில், 'சந்திரயான்-2' விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெளியான டுவிட்கள், முதலிடத்தை பிடித்துள்ளன.

பொழுதுபோக்கு துறையில், நடிகர் விஜய்யின், 'பிகில்' பட போஸ்டர் வெளியீடு தொடர்பான டுவீட்கள் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளன.
இந்தாண்டின், 'டாப் 10' பேசுபொருளில், லோக்சபா தேர்தல், சந்திரயான்-2 ஆகியவை முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளதாக, டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
11-டிச-201914:44:36 IST Report Abuse
Balaji இதையெல்லாம் தேவையில்லாமல் சமூக வலைத்தளம் போல பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட வேண்டுமா???? என்னை போல்ருத்தவரை தேவையில்லை என்று தான் சொல்வேன்........
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் கோட்சே நீங்கள் இப்படி சொம்பு அடிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்!..
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-டிச-201912:33:30 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு appadi தமிழன் சாராயம் குவாட்டர் பிரியாணி என்று சொல்லும் நீர் ஏன் இந்த ஊரில் இருக்குறீர்கள் ஓடுங்கள் உங்கள் ஊர்க்கு எங்கு நீங்கள் கூறியவை எல்லாம் இல்லாமல் சுபிட்சம் உள்ளதோ அங்கே அதற்க்கு வக்கற்று தானே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேர்கள் பின்னர் தமிழன் என்றால் இளக்காரமா உங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X