பொது செய்தி

இந்தியா

குடியுரிமை மசோதா : திரிபுராவில் இன்டர்நெட் சேவை முடக்கம்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (11)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்ட மசோதா இன்று (டிச.,11) ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொபைல் இன்டர்நெட் மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது.





கடும் அமளி மற்றும் எதிர்ப்பிற்கு இடையே லோக்சபாவில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் 11 மணி நேர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து திரிபுரா முழுவதும், வன்முறைகளை கட்டுப்படுத்த மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ்., சேவையும் முடக்கப்பட்டுள்ளது.





குடியுரிமை மசோதா தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழங்குடியினர் அல்லாதவர்கள் வைத்துள்ள கடைகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த மசோதாவுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201913:25:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த ஆட்டம் எல்லாம் எடுபடாது , உங்கள் சொந்தநாட்டிற்கு ஓடிவிடுங்கள். பாரத தேசம் அந்நியர்களின் புகலிடம் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-டிச-201912:12:11 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஷா நாளை ஒரு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை என்பார் அதை கை தட்டி வரவேற்க்கே சொம்புகள்
Rate this:
Share this comment
Cancel
manithan -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201911:50:55 IST Report Abuse
manithan மோடி அரசு சசந்திக்கும்! முதல் மக்கள் கிளர்ச்சி இது! மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் போராட்டம்! இதன் உண்மை தன்மையை அரசு அலசி ஆராய வேண்டும்! செய்வார்களா?
Rate this:
Share this comment
11-டிச-201913:26:11 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இது மக்கள் கிளர்ச்சி அல்ல , வந்தேறிகளின் அராஜகம். கலவரம் செய்வது , குண்டுவெடிப்பது , கூலிப்படை வேலை செய்வது தான் அவர்கள் வேலை. அதனால் தான் அவர்களை வெளியேற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X