பொது செய்தி

இந்தியா

வேட்டி, சேலையில் வந்து நோபல் பரிசு பெற்ற தம்பதி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நோபல் பரிசளிப்பு விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி வேட்டி, சேலையில் வந்து, பரிசினை பெற்றது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவியும் பிரெஞ்ச் பொருளாதார வல்லுநருமான எஸ்தர் டுப்லோ ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழா சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹாம் கன்சர்ட் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற வந்த அபிஜித் மற்றும் அவரது மனைவி இந்திய பாரம்பரிய முறையில் உடையணிந்து வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அபிஜித் பானர்ஜி, தங்க நிற பார்டர் வைத்த வேட்டியும், கருப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார். அவரது மனைவியான எஸ்தர் பச்சை மற்றும் ஊதா நிறத்தால் ஆன சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இந்திய பெண்ணை போன்று எஸ்தர் புடவை அணிந்து வந்து, பரிசு பெற்றது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. டுவிட்டரிலும் இந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201919:23:02 IST Report Abuse
ஆப்பு ஃப்ரெஞ்ச் பாரம்பரியம் புடவையா?
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201916:20:26 IST Report Abuse
அப்பாவி 👏👏👏👏
Rate this:
Share this comment
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201912:18:33 IST Report Abuse
RS PRAKASH Being looking like Tamil man spread over tamil culture all over the universe.I said one thing Tamil language and Tamil culture unique identity of our cultural heritage..Dont we forget anywhere in the world...we strong position on the Tamil community in the world...If we forget this one total tamil community is collateral damage...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X