மாணவிகளை கேலி செய்தவரை துவைத்தெடுத்த பெண் போலீஸ்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (27)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கான்பூர்: பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்த நபரை பெண் கான்ஸ்டபிள் ஒருவர், பொது இடத்தில் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உ.பி.,யில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கான்பூரின் பித்துர் பகுதியில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, வழியில் நின்று கேலி செய்து, பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் அப்பகுதி இளைஞர் ஒருவர். இதனைக் கண்ட பெண் கான்ஸ்டபிள் ஒருவர், அந்த நபரை பொது இடத்தில், தனது ஷூவால் கடுமையாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பித்தூர் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் சன்சல் சவ்ரசியா தான் அந்த இளைஞரை துவைத்து எடுத்துள்ளார். இவர் ஆன்டி-ரோமியோ படையை சேர்ந்தவர். பள்ளி மாணவிகளுக்கு தெந்தரவு அளிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் எஸ்.பி., அனில் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201921:17:41 IST Report Abuse
ஆப்பு எங்கே மனித உரிமை ஆணையம். எப்புடி ஒரு பொறுக்கியை போலீஸ் அடிக்கலாம்? அதுவும் பெண்போலீஸ். உடனடி விசாதிச்சு அவனுக்கு நீதி, நியாயம், ஊக்கத்தொகை எல்லாம் வழங்க ஏற்பாடு செய்யுங்க. சுப்ரீம் கோர்ட்டையும் துணைக்கு அழையுங்க.
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-டிச-201920:22:59 IST Report Abuse
THINAKAREN KARAMANI தவறுசெய்தவனை தண்டிக்கணும். இதுபோன்று போலீஸ் உடனுக்குடன் ''கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால்' வேலைமுடிந்தது. நாம் தப்புசெய்தால் போலீஸ் இதுபோன்று நமக்கும் தரவேண்டியதை தந்தே தீருவார்கள் என்று உணர்வான். கண்டிப்பாக தவறுகள் குறையும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
11-டிச-201917:15:27 IST Report Abuse
Rajas 30 வருடங்களுக்கு முன் இப்படி தான் இருந்தது. குற்றம் செய்கிறவனை ரோட்டில் உதைக்கிறபோது அதை பார்ப்பவர்கள் தவறு செய்யவே பயப்படுவார்கள். நன்றாக இருந்த போலீஸ் / ஆட்சியில் (தமிழ்நாடு) மெதுவாக அரசியல்வாதிகள் ஊடுருவினர்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு confired IPS /IAS என்று கொடுத்து நாசம் செய்து விட்டார்கள். ஜெயலலிதாவாவால் பரவலாக அதிகமாகி கருணாநிதி ஆட்சியில் ருசி கண்டு இப்போது ஒரு சட்டம் போல வழக்கமாகி விட்டது.
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
12-டிச-201917:02:53 IST Report Abuse
A Pபோலிஸைக் குட்டிச்சுவராக்கியது திமுக , அதிமுக அரசியல் . போலீசிலும், கட்சிகளிலும் ஒரு சிலரே நல்லவர்கள். போலீசுக்கு திருடன் பயந்த காலம் பொற்காலம். அப்போது போலீசார் தவறு இழைத்து பார்த்ததில்லை. கேள்வி கேட்கவேண்டிய அதிகாரிகளும், அமைச்சர்களும் திருடும் பொது என்னத்தைத்தான் செய்வது. மானம் ரோஷம் இல்லாதவர்கள்....
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-டிச-201903:41:47 IST Report Abuse
 nicolethomsonதமிழக போலீசை இவ்வளவு கீழ்த்தர நிலைக்கு கொண்டு சென்றது காலம் சென்ற எட்டப்பனின் கைவண்ணம்ம் , மீண்டும் அவனின் வாரிசு வந்தால் என்னாகும் என்று யோசிக்கவே நெஞ்சம் பதறுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X