உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்து, 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.





உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனு இன்று (டிச.,11) விசாரிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக, காங், மதிமுக, இடதுசாரி கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரிப்பட்டது. இந்த விவகாரத்தில் காங்., சார்பில் வழக்கறிஞராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகினார்.





உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோர்ட் உத்தரவு காரணமாக ஏற்கனவே அறிவித்த தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, சமீபத்தில் புதிய அறிவிப்பாணையை தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பினரும் தலைமை நீதிபதி பாப்டே முன்பு தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.


வாதங்கள்:


தமிழக அரசு: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை திமுக விரும்பவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் இதுபோன்ற மனுக்களை திமுக தாக்கல் செய்துள்ளது.
திமுக: ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டை பயன்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தேர்தலை நடத்த கூடாது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. தங்கள் தரப்பில் ப.சிதம்பரம் வாதங்களை வைக்க மேலும் 5 நிமிடங்கள் வேண்டும்.
தமிழக அரசு: ஒரு நிமிடம் கூட அளிக்காதீர்கள். தேர்தலை நிறுத்த இன்னும் எவ்வளவு நேரம் பேசுவார்கள்.
திமுக: மற்ற வழக்குகளில் நீங்களும் இப்படி தான் செய்தீர்கள்.
தமிழக அரசு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அரைகுறையாக படித்துவிட்டு பேசுகிறார்கள். திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய்.
தலைமை நீதிபதி பாப்டே: 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் திமுக.,விற்கு சம்மதமா?
திமுக: ஆரம்பத்தில் இருந்தே இதே கருத்தை தான் வலியுறுத்தி வருகிறோம்.


உத்தரவு


வாதங்களின் அடிப்படையில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து, தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி தேர்தலை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
11-டிச-201920:24:51 IST Report Abuse
MIRROR திமுகவின் கோரிக்கை நியாயமானது என்பதால் தானே கோர்ட்டு அதை ஏற்று அதன்படி 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்த்ல் நடத்த உத்திரவிட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
11-டிச-201920:10:29 IST Report Abuse
kumzi பொணத்தை வைத்து அரசியல் செய்யும் சீனிசக்கர சித்தப்புவுக்கு இன்னும் பொணம் கெடைக்கலயோ
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
11-டிச-201918:49:19 IST Report Abuse
karutthu தங்கள் தரப்பில் ப.சிதம்பரம் வாதங்களை வைக்க மேலும் 5 நிமிடங்கள் வேண்டும். ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் (Accused) ஜாமீனில் வெளிவந்தவர் கோர்ட்டில் வாதாடலாமா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X