பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா தாக்கல்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (31+ 25)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கடும் எதிர்ப்பை மீறி, லோக்சபாவில் நிறைவேறிய குடியுரிமை திருத்த மசோதா, ராஜ்யசபாவில் இன்று (டிச.,11) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்தார்.





பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் நிறைவேறியது. 'இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், இந்த மசோதா, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவை போல், ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேறும் என, மத்தியில் ஆளும், பா.ஜ., நம்புகிறது. கூட்டணியில் இல்லாத, பல மாநில கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறும் என, பா.ஜ., நம்பிக்கையுடன் உள்ளது.




ராஜ்யசபாவில் மொத்தமுள்ள, 238 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 83 உறுப்பினர்களே உள்ளனர். அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, 105 உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு, 11; பிஜு ஜனதா தளத்துக்கு, 7; ஒய்.எஸ்.ஆர்.காங்., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தலா இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த, 22 பேரின் ஆதரவு கிடைத்தால், இந்த மசோதா நிறைவேறி விடும். பார்லி கூட்டம், நாளையுடன் முடிய உள்ளது. அதனால், இந்த மசோதாவை இன்றே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.


முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல :


மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா, பாக்., மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்கள்தொகை தலா 20 சதவீதம் சரிந்துள்ளது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு ஓடி வந்திருக்கலாம். குடியுரிமை மசோதா தொடர்பாக முஸ்லீம்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர்களிடம் கேட்கிறேன், இந்த மசோதா எந்த விதத்தில் இந்திய முஸ்லீம்களுடன் தொடர்புபடுகிறது. அவர்கள் இந்திய குடிமக்கள். எப்போதும் அப்படியே இருப்பார்கள். அவர்கள் மீது அடக்குமுறையை கொண்டு வரப்படாது.
இந்த மசோதா குறித்து இஸ்லாமியர்கள் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. ஓட்டு வங்கிக்காக குடியுரிமை மசோதா கொண்டு வரவில்லை. இது மோடியின் அரசு. அரசியலமைப்பின் படி நடக்கும் இந்த அரசில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (31+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
11-டிச-201920:11:53 IST Report Abuse
Kumar periyaar உனக்கு எமன் பக்கத்திலே இருக்கிறான் போலெ தெரிகிறது இவ்வளவு பேரின் சாபமும் வந்து கொண்டு இருக்கிறது உனக்கு
Rate this:
Share this comment
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
11-டிச-201919:35:49 IST Report Abuse
rajprince பொருளாதார வீழ்ச்சி,விலைவாசி,வேலையில்லா திண்டாட்டம்,பண மதிப்பின்மை,கற்பழிப்பு குறித்து மக்களை திசை திருப்பவே எந்த குடியுரிமை மசோதா
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201917:06:52 IST Report Abuse
Ramaraj P அடுத்த நாட்ட பத்தி பேசிரீங்களே லோக்,ராஜ் சபால எத்தினி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் மக்களே !!!.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X