பொது செய்தி

தமிழ்நாடு

பார்வையற்ற மாணவர்களை பரிதவிக்கவிட்ட விஜய்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். மூன்று நாட்களாக பூவிருந்தவல்லி அருகே உள்ள பார்வையற்ற பள்ளியில் இப்படப்பிடிப்பு நடந்தது. இங்கு படக்குழுவினர் செய்த அட்டகாசம் ஒரு புறம் இருக்க, இங்கு பயிலும் பார்வையற்ற மாணவர்களை சந்திப்பதாக சொல்லிவிட்டு, சத்தமின்றி கிளம்பி அவர்களை நடிகர் விஜய் ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.latest tamil newsஇதுபற்றி இப்பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் என்பவர் நடிகர் விஜய்க்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
உங்களின் 64வது படப்பிடிப்பு, எங்களது பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது. இங்கு எந்த படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்க மாட்டோம். ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்று படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுகிறீர்கள். அதன்பின் எமது பள்ளி வளாகம் படும்பாடு படு மோசம்.


பள்ளி வளாகத்தில் புகை

சிறு தொகையை செலுத்திவிட்டு, மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக்குழு, பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் மாணவர்கள், பணியாளர்களிடம் நடந்து கொண்டதெல்லாம் அநியாயம். எங்கள் மாணவர்கள் கூட வளாகத்தில் நடமாட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் வாகனங்கள். நுழைவு வாயிலில் உங்களை பார்க்க பெருங்கூட்டம். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாது. வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஏக கெடுபிடிகள். ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு பாட புத்தகங்களை படித்துக் காட்ட வந்த தன்னார்வலர்களும் தடுக்கப்பட்டனர்.


latest tamil newsபள்ளி வளாகம் என்கிற புரிதல் கூட இல்லாமல், ஆங்காங்கே புகை பிடிப்பது, குப்பைகளைப் போடுவது என உங்கள் குழுவினர் அலட்சியமாக நடந்து கொண்டனர். படப்பிடிப்புக் குழுவின் பெரும்பாலானவர்களுக்குப் பார்வையற்ற மாணவர்களை எப்படிக் கையாள்வது என்கிற அடிப்படைப் புரிதலே இல்லை. அது உங்களுக்கும் இல்லை என்றே கருதுகிறேன்.


“கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற”

கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து வெறும் இரண்டே நிமிடங்கள் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் எங்கள் மாணவர்கள் மூன்று மணி நேரமாகக் குழுமி இருக்க, அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, சைகை செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள்.
உங்கள் குழுவினரை அணுகி எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, “கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற” எனக் கேவலமாகப் பதில் வந்திருக்கிறது.

மூன்று நாட்களாக உங்கள் குழுவினர் எங்கள் நிறுவனத்தின்மீது செலுத்திய ஆக்கிரமிப்புகள், அதிகாரங்கள், அதனால் எங்கள் மாணவர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் என அத்தனையையும், உங்கள் மீது இருக்கிற அன்பினாலும், உங்களிடம் எப்படியேனும் ஒருமுறையாவது பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் மாணவர்கள் பொறுத்துக்கொண்டனர்.


latest tamil newsஉங்களை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்பதற்காக இரு ஆசிரியர்கள் உங்கள் குழுவினரை அணுகிப் பேசினோம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, முதலில் மாலை நான்கு மணிக்கு என்றார்கள். பிறகு ஆறு மணிக்கு என்றார்கள். அதிலும் உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட உதயக்குமார், கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார்.


பார்வையற்றவர்கள் ரசிகர்கள் இல்லையா?

மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடு ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் லோகேஷ் கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசினார். ஆனால், நிச்சயம் சந்திக்கிறீர்கள் என்று சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, ரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பியதைக் கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது.

சரி, மாணவர்களை விடுங்கள். ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்க வேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை. எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறுபோட மட்டும் என்ற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா?


latest tamil news
கோடி இழப்பு வந்துவிடுமோ?

தனியார் பள்ளியாக இருந்திருந்தால், மேடையில் நின்று, மைக் பிடித்து மாணவர்களிடம் பேசியிருப்பீர்கள் தானே? இல்லாவிட்டால் அந்தப் பள்ளி முதலாளிகள் உங்களை விட்டுவிடுவார்களா என்ன? அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? இரண்டு நிமிடங்கள் பேசுவதில் உங்களுக்கு எத்தனை கோடி இழப்பு வந்துவிடும்?

ஒரு பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி விஜய்.

பின்குறிப்பு: 'எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற சூழலை ஏற்படுத்துதல்' என்கிற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நோக்கம் வெறும் வாசகம் அல்ல, உண்மைதான் என்றால், இதுபோன்ற படப்பிடிப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புப் பள்ளிகளில் அனுமதிப்பதற்கு முன்பு, அதனால் அந்தப்பள்ளி அடையவிருக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து அனுமதி கொடுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-டிச-201912:17:43 IST Report Abuse
Bhaskaran இவனையெல்லாம் புறக்கணித்தால் சரியாகும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-டிச-201919:20:10 IST Report Abuse
konanki ரொம்ப சிம்பில்ங்க ஜோஸப் விஜய் நடிக்கும் எந்த படத்தை யும். நாமும் நம் குடும்பம் உறவுகள் மற்றும் நண்பர்கள் காசு கொடுத்து பாக்க மாட்டோம் என்று முடிவு செய்து அமுல் படுத்துவோம்
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
12-டிச-201911:34:58 IST Report Abuse
Muthu Kumarasamy கேரள மக்களை போல சினிமா காரர்களையும், அரசியல்வாதிகளையும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத நிலைக்கு தமிழகம் வர வேண்டும். அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட கூடாது. பார்வையற்ற மாணவர்களை விஜய் பார்க்காவிட்டால் ஒன்றும் குடி முழுகி போகாது. பள்ளி வளாகத்தை அசுத்த படுத்தியதற்கு அவர்கள் மீது வழக்கு போட வேண்டும். பள்ளி வழக்கங்கள் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கே புகை பிடித்ததற்கும் வழக்கு தொடரலாம், அரசு அனுமதித்தால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X