96 டூ பாபநாசம்: படப்பாணியில் பலே ஆசாமியின் கொலை நாடகம்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Kerala, 96_Drishyam_Movie, Papanasam_Movie, Murder, கேரளா, 96, பாபநாசம், கொலை

இந்த செய்தியை கேட்க

கோட்டயம்: 96 படத்தைப் போல சிறு வயது காதலிக்காக, மனைவியை கொலை செய்து பாபநாசம் படப்பாணியில் தப்பிக்க முயற்சித்து மாட்டிக்கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே 3 மாதங்களுக்கு முன்பு கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் யார் என்பது தெரியாததால் போலீஸ் தரப்பில் அடையாளம் காணும் முயற்சியாக நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாசேரியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தன் மனைவி வித்யாவை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரித்த போலீசார், வித்யாவின் செல்போன் சிக்னல் பீகாரில் இருப்பதாக காட்டுவதை கண்டறிந்தனர். ஆனால், வித்யா காணாமல் போன அன்று கணவன், மனைவியின் செல்போன் சிக்னல்கள் திருவனந்தபுரம் அருகே ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்ததையும் கண்டறிந்து சந்தேகமடைந்தனர்.
பிரேம்குமாரிடம் கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசார் கொடுமைப்படுத்துவதாக தன் குழந்தைகளுடன் சேர்ந்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும், பிரேம்குமார் தற்போது சுனிதாபேபி என்ற பெண்ணுடன் வசித்து வருவதை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இருவரையும் பிடித்து விசாரித்ததில், இருவரும் சேர்ந்து வித்யாவை கழுத்து நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு 96 படப்பாணியில் பள்ளி கால மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில், பள்ளியில் காதலித்து பின்னர் பிரிந்த காதல் ஜோடியான பிரேம்குமார், சுனிதாபேபி சந்தித்தனர். அப்போது, இருவருக்குள்ளும் பழைய காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. இது, பிரேம்குமாரின் மனைவி வித்யாவிற்கு தெரியவந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பருமனாக இருக்கும் மனைவியிடம் உடல்எடையை குறைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு கூட்டிச்செல்வதாக கூறி, திருவனந்தபுரம் அழைத்து சென்று வித்யாவிற்கு மதுவை ஊற்றி, காதலி சுனிதாவுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். சடலத்தை தமிழகம் வந்து வள்ளியூரில் வீசிவிட்டு, செல்போனை பாபநாசம் படப்பாணியில் மும்பை செல்லும் ரயிலில் போட்டுள்ளார்.
செல்போன் சிக்னல் இறுதியாக பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,திரிஷ்யம் (திரிஷ்யம் ரீமெக் தான் பாபநாசம்) படங்களை பார்த்து தான் கொலை செய்ததாக பிரேம்குமார் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-டிச-201907:52:15 IST Report Abuse
Bhaskaran உலகநாயகன் பெருமை கொள்ளலாம்.முதலில் மலையாளத்தில் தான் இந்த படம் வந்தது. இனி சென்சார் அதிகாரிகள் இம்மாதிரிபடங்களை வெளியிட தடை விதிக்கணும்
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
11-டிச-201919:59:07 IST Report Abuse
kumzi இந்திய மக்களின் சீரழிவுக்கு காரணமே தற்போதைய சினிமா தான்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-டிச-201916:35:48 IST Report Abuse
Nallavan Nallavan எல்லாப்புகழும் காமஹாசனுக்கே ......
Rate this:
Share this comment
Kandaswamy - Coimbatore,இந்தியா
13-டிச-201916:54:52 IST Report Abuse
Kandaswamyஇல்லை இல்லை மோஹன்லாலுக்கே...
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
14-டிச-201902:52:21 IST Report Abuse
meenakshisundaramஇது அரைகுறை யானபுரிதலையே காட்டுது ,கமல் எடுத்த படம் அசல் அல்ல .கேரளா படமான 'திரிஷ்யம்' -மோகன்லால் நடித்ததுவே .அதனால் எல்லா புகழையும் போக வேண்டிய இடம் மலையாளத்துக்கே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X