பொது செய்தி

இந்தியா

குஜராத் கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பில்லை: நானாவதி கமிஷன்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : குஜராத்தில் 2002 ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்திற்கும் மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கும் தொடர்பு இல்லை என அவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



குஜராத்தின் கோத்ரா பகுதியில் 2002 ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. கலவரம் மற்றும் ரயில் எரிப்பில் ஏறக்குறைய 1500 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன், 2014 ம் ஆண்டே குஜராத் அரசிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நானாவதி கமிஷனின் அறிக்கை, குஜராத் சட்டசபையில் இன்று (டிச.,11) தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இந்த அறிக்கையில், 2002 ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது நடந்த மத கலவரத்திற்கும் குஜராத்தின் அப்போதை முதல்வர் மோடி தலைமையிலான அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்ததாகவோ, எந்த அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
சில இடங்களில் அசம்பாவிதங்களை கட்டுக்குள் வைக்க போலீசார் தவறி விட்டனர். போதிய அளவில் அவர்களிடம் ஆயுதம் இல்லாததே இதற்கு காரணம். போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்காததே கலவரம் தீவிரமடைந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1500 க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201921:12:58 IST Report Abuse
ஆப்பு அஜித் பவாருக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை. கனிமொழி ஆ.ராசா இவிங்களுக்கும் 2g ஊழலுக்கும் தொடர்பில்லை. நம்பிட்டோம்.
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201921:12:16 IST Report Abuse
sekar ng 1500க்கும் மேல்மட்ட இந்துக்களை முஸ்லீம்கள் 🔥 தீ வைத்து கொளுத்தியதை திமுக முதல் எல்லா ஊடகமும் இருட்டிப்பு செய்தது ஏன்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-டிச-201920:06:20 IST Report Abuse
Nallavan Nallavan இங்கே கருத்து எழுதும் அரைவேக்காட்டு அர்பன் நக்ஸல்களே ....... மோதியைத் தாராளமாகத் தாக்கி எழுதுங்கள் ....... ஆனால் அதற்குப் பிறகாவது உண்மையைத் தெரிந்து கொண்டு எழுதுங்கள் ..... குஜராத்தில் மதக்கலவரங்கள் நீண்ட வரலாறு உடையவை ....... மோதி பிறக்கும் முன்னரே, ஏன் ஹிந்துத்வா பிறக்கும் முன்னரே அங்கே மதக்கலவரங்கள் பிறந்து விட்டன ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X