பொது செய்தி

இந்தியா

வெங்காயம் விலை 400 சதவீதம் அதிகரிப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : 2019 ம் ஆண்டில் மார்ச் மாதத்திற்கு பிறகு வெங்காயத்தின் விலை 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக லோக்சபாவில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.






லோக்சபாவில் அவர் கூறுகையில், சில்லறை விற்பனையில் மார்ச் மாதம் ரூ.15.87 ஆக இருந்த ஒரு கிலோகிராம் வெங்காயம், டிசம்பர் 3 ம் தேதி நிலவரத்தின்படி ரூ.81.9 ஆக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்த பிறகு வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் சுமார் 114 நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 க்கும் அதிகமாகவே விற்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகே வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர துவங்கி உள்ளது.






மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் கோல்கத்தாவில் அதிகமாக உள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் ரூ.160 க்கும், திருப்பதி, எர்ணாகுளம், திச்சூர், பாலக்காடு போன்ற பகுதிகளில் ரூ.150 க்கும் விற்பனையாகின்றன. வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் முக்கிய மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பெய்த தொடர் கனமழையால், வெங்காய பயிர்களை சேதமானதே, உற்பத்தி குறைந்ததற்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
12-டிச-201905:37:01 IST Report Abuse
Rpalnivelu வெங்காய மதிப்பு இறங்கிவிட்டதே
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் இந்து மதம் மட்டுமே முக்கியம் என்று அதற்கான கொள்கைகளை மட்டுமே அனுதினமும் யோசித்து முன்னெடுத்துச் செல்லும் மத்திய அரசிடம் வேற என்ன எதிர் பார்க்கலாம்? பொருளாதார கடும் வீழ்ச்சி, வெங்காய விலை கடுமையான ஏற்றம், அளவிடமுடியாத வேலை வாய்ப்பின்மை இப்படி மக்களின் வாழ்வாதாரம் அத்தனையும் பரிபோகிக் கொண்டே இருக்கின்றது. மத போதையிலேயே மக்களை வைத்து இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டே இருக்கிறார்கள். பணம் அல்லது மதம் இதை இரண்டு வைத்து ஓட்டை வாங்கி விடலாம் என்பதாகவே தற்போதைய அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
11-டிச-201920:33:08 IST Report Abuse
MIRROR விலைவாசி கட்டுப்படுத்த முடியவில்லை. இது அரசின் தோல்வி தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X