பூடான், இலங்கையை சேர்க்காதது ஏன்?: சிதம்பரம்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (104)
Advertisement
RajyaSabha, #CitizenshipAmmendmentBill2019, IndiaSupportsCAB, குடியுரிமை மசோதா,  சிதம்பரம், காங்கிரஸ்,இலங்கை, பூடான்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளை சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன் என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் போது, அந்த மசோதா சட்டவிரோதம் என அறிவிக்கப்படும். இந்த மசோதா பார்லிமென்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம்.
இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கக்கூடாது. இந்த மசோதாவில், பூடான், இலங்கையை சேர்க்காதது ஏன்?மசோதா குறித்து அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்டீர்களா? அவர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக அவரை, இங்கு அழைத்து வர மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா?





ஹிந்துத்துவாவை முன்னெடுப்பதற்காக இந்த மசோதாவை பா.ஜ., கொண்டுவந்துள்ளது. நாட்டை நீதிமன்றங்கள் தான் காப்பாற்ற வேண்டும். குடியுரிமை மசோதா அரசியல்சாசன விதிகளை மீறியது. மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்டது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
13-டிச-201914:33:44 IST Report Abuse
chenar பாகிஸ்தான் பிய்ச்சிக்கிட்டு போனதுக்கும் குடியுரிமை சட்டத்திற்கும் என்ன ஒற்றுமை ?
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
12-டிச-201918:16:02 IST Report Abuse
வால்டர் இலங்கைலதான் எல்லோரையும் கொன்னு குவிச்சிட்டீங்களே.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-டிச-201917:37:02 IST Report Abuse
r.sundaram பிரச்சனையை புரிந்து கொண்டதாக தெரிய வில்லை. வீம்புக்கு பேசுவதாக தெரிகிறது. அவர் சொல்லும் நாடுகளில் சிறுபான்மையருக்கு மத ரீதியிலான தொந்தரவுகள் கிடையாது. ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் அல்ல.
Rate this:
Share this comment
Thirumalai Rajan - Tindivanam,இந்தியா
18-டிச-201915:15:13 IST Report Abuse
Thirumalai Rajanஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் அல்ல.//சரியான கருத்து . சின்ன திருத்தம். குதிரைக்கு குர்ரம் என்றால் ஆணைக்கு அர்ரம் அல்ல ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X