இளைஞருக்கு பாலியல் தொல்லை; செல்பியால் வந்த வினை

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (12)
Advertisement
Instagram, Mumbai, Rape, Stalkers, மும்பை, இளைஞர், பாலியல்தொல்லை, இன்ஸ்டாகிராம்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மும்பையில் இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த இளைஞரை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிச.,08 ம் தேதி பிரபல ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு, ஹோட்டல் முன்பு நின்று செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தார். இளைஞரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் 4 வாலிபர்கள், அந்த ஹோட்டல் பற்றிய விவரத்தை அறிந்து அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.





ஹோட்டலில் இளைஞரை கண்டறிந்த 4 பேரும், அவரிடம் சென்று, இன்ஸ்டாகிராமில் தங்களின் பெரிய ரசிகர்கள் என பேச்சுக் கொடுத்துள்ளனர். மேலும், தங்களுடன் பைக் ரைடு வருமாறு அழைத்துள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி 4 பேருடன் பைக்கில் சுற்றியுள்ளார். பின்னர், மும்பை விமானநிலையம் அருகே பைக்கை நிறுத்தி, காரில் செல்லலாம் என வற்புறுத்தியுள்ளனர்.





காரில் சுமார் 3 மணிநேரமாக 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்பு, அடுத்தநாள் காலை, சாலையின் ஓரமாக இளைஞரை இறக்கிவிட்டு 4 பேரும் தப்பினர். இது குறித்து வி.பி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் புகாரளித்தார். அடுத்த சில மணிநேரத்தில் 4 பேரையும் இயற்கைக்கு மாறான உறவு வைத்ததாக 377 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
12-டிச-201911:00:28 IST Report Abuse
Kumar periyaar இதை செய்தவர் மதத்தை நம்புபவர்களாக தான் இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
13-டிச-201910:52:59 IST Report Abuse
TamilArasanஇதை நீ சொல்றா...அதான் ஆச்சரியமாய் இருக்கு -...
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201907:02:24 IST Report Abuse
செந்தில்ராஜ் இந்த ஹோமோ லெஸ்பியன் எல்லாம் ஆரம்பிச்சது நம்ம ஹிந்து நாட்டுல இல்லன்னு தெரிஞ்சுருக்கும். இங்கே நாத்திக கும்பலும், மதமாற்ற கும்பலும் மட்டுமே இதற்கு உபயம்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
11-டிச-201919:46:46 IST Report Abuse
Nagarajan D இந்த மாதிரி காரணங்களுக்காக சீர்திருத்தப் பள்ளி உபயோகப்படுவது வெட்கக் கேடானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X