பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபா டிவி நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (22)
Advertisement
Rajya Sabha TV, Rajya Sabha, TV, live telecast, amit Shah, Opposition MP, IndiaSupportsCAB, CitizenshipAmmendmentBill2019,ராஜ்யசபா டிவி, அமித்ஷா, குடியுரிமை மசோதா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசினார். அப்போது, அசாம் மக்களின் உரிமைகளை பா.ஜ., அரசு காக்கும் எனக்கூறினார். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எழுந்து நின்று, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷா பேசுவது தவறு எனக்கூறி கூச்சல் போட்டனர்.





இதனை கண்டித்த அவை தலைவர் வெங்கையாநாயுடு, அமித்ஷா பேசும் போது, குறுக்கிடக்கூடாது. உங்களுக்கு பேச நேரம் அளிக்கப்படும். அப்போது பேசுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள் என்றார். எம்.பி.,க்கள் கூச்சல் போட்டதால், கோபமடைந்த வெங்கையா நாயுடு, கூச்சல் போடும் எம்.பி.,க்கள் பேசுவது எதுவும் பதிவு செய்யப்படாது என எச்சரித்தார். தொடர்ந்து, ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக ராஜ்யசபா டிவி வட்டாரங்கள் கூறுகையில், அவை தலைவர், தனது இருக்கைக்கு கீழ் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினார். இது ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு அறைக்கு சிக்னல் எழுப்பும். தொடர்ந்து டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து அமைச்சர் அமித்ஷா பேச துவங்கியதும், ஒளிபரப்பு துவங்கியது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201904:38:35 IST Report Abuse
Nepolian S எது நடந்தாலும் அதனை மக்களிடத்தில் காட்டியிருக்கவேண்டும்...பிராடுகளா எதிர்கட்சிகளின் கேள்விகளை சமாளிக்க முடியவில்லை போலும்... இன்னும் என்னென்ன மசோதாக்கள் உங்கள் ஓட்டு வங்கிக்கு சாதகமோ அதனை செய்துகொண்டே இருங்கோ...நாடு நாசமா போய்க்கிட்டிருக்கு...அது போகட்டும்..
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
11-டிச-201920:42:02 IST Report Abuse
MIRROR கூச்சல் போட்டார்கள் என்றால் அதையும் ஒளிபரப்பி மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
11-டிச-201920:10:33 IST Report Abuse
Kumar periyaar ஏமாந்த மக்களை வைத்து நல்லா அவர்கள் அரசியல் பண்ணுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X