பொது செய்தி

தமிழ்நாடு

5வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Chennai, Baby, Fall, 5thFloor, சென்னை, குழந்தை, பால்கனி,

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் 5வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு விசாகபட்டினத்தை சேர்ந்த மைபால், நீலம் தம்பதியினர் ஜினிஷா என்ற 8 மாத குழந்தையுடன் வந்துள்ளனர். 5வது மாடியில் இருந்த உறவினர் வீட்டில் நேற்று (டிச.,10) காலை 10 மணியளவில் குழந்தையை தூங்கவைத்துவிட்டு மைபால், நீலம், உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கண் விழித்த ஜினிஷா, தவழ்ந்து, தவழ்ந்து பெட்ரூம் ஒட்டியுள்ள பால்கனிக்கு சென்றது.




இரும்பு வலையைக் கொண்டு அடைக்கப்பட்டிருந்த பால்கனியில் ஒரு ஓரம் மட்டும் தளர்ந்த நிலையில் இருந்துள்ளது. இதன் வழியே எட்டிப் பார்த்த குழந்தை தவறி, 5வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குடியிருப்பின் கீழே நிறுத்தப்பட்டிருந்த பைக் சீட்டின் மீது விழுந்ததால் மூச்சு விடாமல் மயங்கியது. அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குழந்தையை தூக்கி நெஞ்சில் கை வைத்து அழுத்தியுள்ளார். இதில், மயக்கம் தெளிந்து அழத்தொடங்கியது.
லேசான எலும்பு முறிவுடன் அழுத குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநர், குழந்தை குறித்து அங்குள்ள வீட்டினரிடம் விசாரிக்க குடியிருப்பு உரிமையாளரிடம் தகவல் கூறினார். இதனையடுத்து, அவர் விசாரித்ததில் மைபாலின் குழந்தை என தெரியவந்தது.
குழந்தை கீழே விழுந்தது கூட தெரியாமல் அதுவரை மைபால், நீலம் தம்பதியினர் உறவினரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். புகார் எதுவும் வரவில்லையெனினும் தகவல் அறிந்த யானைகவுனி போலீசார் விசாரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
12-டிச-201903:32:07 IST Report Abuse
kumzi கடவுளின் கிருபையால் குழந்தை பிழைத்துக்கொண்டது கடவுளுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-201900:29:34 IST Report Abuse
தமிழ்வேல் ஆட்டோ சாருக்கு நன்றிகலந்த வணக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-டிச-201920:37:02 IST Report Abuse
Vena Suna குழந்தையை கவனிக்காம அப்படி என்ன புடுங்கீந்தீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X