பொது செய்தி

இந்தியா

அசாமில் இணைய சேவை துண்டிப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (14)
Advertisement
CitizenshipAmmendmentBill2019, CitizenshipAmmendmentBill2019, Dibrugarh, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, அசாம், ராணுவம், திரிபுரா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து அசாமில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல், 24 மணி நேரம் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவதை தடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று, திரிபுராவின் கன்ச்சன்பூர் மற்றும் மனு மாவட்டங்களிலும், அசாமின் போன்கைகோன் மாவட்டத்திலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை ராணுவம் மறுத்துள்ளது. அங்கு, அசாம் ரைபிள் படையினர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

அசாமின் திப்ருகார்க் மாவட்டத்தில் அதி விரைவுப்படையினர் தயார் நிலையில் இருக்க, வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தயாராக உள்ளனர்.


முதல்வர் காத்திருப்பு


குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், முதல்வர் சர்பானந்தா சோனவால், குவஹாத்தி விமான நிலையத்திற்க வந்து சேர்ந்தார். ஆனால், முக்கிய இடங்களில், போராட்டம் நடப்பதால், வெளியே வர வேண்டாம் என முதல்வரின் பாதுகாப்பு குழுவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால், விமான நிலையத்தில் அவர் நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது.






பஸ்சுக்கு தீவைப்பு


அசாமின் திஸ்புர் மாவட்டத்தில், போராட்டக்காரர்கள் பஸ்சை தீவைத்து எரித்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






இணைய சேவை துண்டிப்பு


போராட்டம் காரணமாக திரிபுராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள மற்றும் குறுஞ்செய்தி சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அசாமில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் மாலை முதல், அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
11-டிச-201921:04:35 IST Report Abuse
மாயவரத்தான் கலவரத்தை காங்கிரஸ் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது.காங்கிரஸ்க்கு எப்போதும் நாட்டுநலனை விட தன் சுய அரசியல்தான் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
11-டிச-201920:28:18 IST Report Abuse
வல்வில் ஓரி வடநாட்டுக்காரன் தமிழ் நாட்டுல கொத்து வேலை, பனியன் கம்பெனி வேலை, விவசாய கூலி வேலைக்கு வரப்புடாதாம்...ஆனா ரோஹிங்யாக்கள் இந்தியாவுக்குள்ள வந்து பல்கி பெருகி கொண்டாடலாமாம்...என்ன லாஜிக் இது?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-201900:46:06 IST Report Abuse
தமிழ்வேல் பொய் சொல்லாத, யாரும் இங்கே வந்து கொத்து வேலை, பனியன் கம்பெனி வேலை, விவசாய கூலி வேலை... "செய்யவேண்டாம்னு சொல்லல". இங்கே இந்தி தெரிஞ்சவன் செய்ற வேலையைத்தான் குறை சொன்னானுவோ. திருட்டுப் பயலுவோன்னு சொல்லி இருக்க வாய்ப்புண்டு. வந்தோரை வாழ வைக்கும் தமிழன் கிட்டே, பரந்த மனப்பான்மை, பகிர்ந்துண்டு வாழ்தல் எப்பவுமே உண்டு....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
12-டிச-201920:26:22 IST Report Abuse
வல்வில் ஓரி ஓ...ரயில்வேயில் இந்திக்காரனை எடுக்க கூடாதுன்னு சொன்னது தமிழன் இல்லையா....சாரி சார்.....
Rate this:
Share this comment
Cancel
Thiru - Chennai,இந்தியா
11-டிச-201920:08:24 IST Report Abuse
Thiru சாதாரண ஜனங்களின் வாழ்க்கையை குலைக்கும் தீவிரவாத கும்பல் எதுவாயினும் வீழ்த்தபடவேண்டியதுதான் ஒரு அரசின் கடமையாகும். எனவே அரசு எத்தகைய எல்லைக்கு சென்று இவர்களை முடக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் கண்டிப்பாக வரக்கூடாது அப்படி வந்தால் அவர்கள் நாட்டின் மீது அக்கறை கொள்ளாத உழல் வாதிகளாக மக்கள் அறிவார்கள். இது திருடர் முன்னேற்ற கழகத்திற்கும் பொருந்தும். காங்கிரஸ் தற்பொழுது அழுகி மண்ணோடு மண்ணாக உருமாறிக்கொண்டிருக்கும் உத்தம கட்சி. கட்டுமரத்தானின் கூடாநட்ப்பின்னால் கேடாய் போனவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X