அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
CitizenshipAmendmentBill2019, CAB, MNM, KamalHaasan, MakkalNeedhiMaiam, கமல், மக்கள்_நீதி_மய்யம், மக்கள்_நீதி_மையம், மநீம, மநீமை, கமல்ஹாசன், அறிக்கை, குடியுரிமை சட்டமசோதா

சென்னை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கமலின் மக்கள் நீதி மையம் கட்சி எதிர்த்து அறிக்கை விட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தை இளம் இந்தியா விரைந்து நிராகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்க வழி செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.





இது குறித்து கமலின் மக்கள் நீதி மையம் வெளியிட்ட அறிக்கை: அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது, மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை. இளம் இந்தியா விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sebastian Charles - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201911:50:20 IST Report Abuse
Sebastian Charles Kamal Sir, What Sridhar Rengarajan was said is perfectly correct. I am your hardcore fan but not like getting ticket on the first day first show, I love your all the movies. Here I would say the understandable percentage of your outcome ( talks, writing, & etc., ) is mere not even 8 to 10 only. However I feel so proud being in that percentage. Yet we humbly requesting you to learn to deliver everything in a very simple manner but still keeping all of your intelligence, knowledge inside. We all believe on you that your action & attitude will be based on your intelligence & knowledge only so then only we all Tamilian including you could expect a corrupt free TN.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
11-டிச-201921:03:15 IST Report Abuse
Subburamu Krishnaswamy Hassan is great hope on young girls support for his party. He is trying to lay roads to a non existing villages.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
11-டிச-201920:26:31 IST Report Abuse
Sridhar Rengarajan கமல்சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் படங்களை நண்பர்களுடன் ரொம்ப ரசித்து பார்ப்பவன் நான். ஆனால் மேடைகளில் மொதல்ல புரியுறா மாதிரி பேசுங்க, அறிக்கை உடுங்க கமல் சார். எத்தனை பேருக்கு இந்த அறிக்கை புரியும். ஒங்களுக்கு புரியுறா மாதிரி சொல்லனும்னா, குணா, ஆளவந்தான், ஹேராம், அன்பே சிவம்லாம் நம்மாளுக்கு புரியாது சார். படையப்பா, சின்னத்தம்பி, கரகாட்டக்காரன், சூர்யவம்சம் படங்கள்தான் தான் புரியும். இப்போதில்லை எப்போதுமே, அதனாலதான் எம்ஜிஆர் எளிமையான வசனங்கள், பாடல்வரிகளால் கவர்ந்தார். உதாரணத்துக்கு சிவாஜி படப்பாடல் ஒன்று அத்திக்காய் காய் காய் - ஆலங்காய் வெண்ணிலவே - இத்திக்காய் காயாதே - என்னைப்போல் பெண்ணல்லவோ. இந்தப்பாடலுக்கு அர்த்தம் நீங்க சொல்ற இளம் தமிழ் வாக்காளர்கள் எத்தனை பேருக்கு தெரியும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் சில ஆயிரம் பேருக்குத்தான் தெரியும். அதுவே எம்ஜிஆர் பாடல்களை எடுத்துக்கொள்வோம். உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் - உலகத்தில் போராடலாம் போன்ற பாடல், கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி - விவசாயி போன்ற பாடல், தொட்டால் பூ மலரும் - தொடாமல் நான் மலர்வேன் என்ற பாடலுக்கு அர்த்தம் தெரியவில்லை என்று தமிழ்நாட்டில் எவனாவது ஒருத்தன் சொல்வானா. யோசித்து பாருங்கள் கமல். புரியுறா மாதிரி பேசுங்கள். உங்கள் அறிவை திறனை மக்களிடம் காட்டாதீர்கள்.அவர்களுக்கு புரிவதில்லை. புரியவும் புரியாது.
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
12-டிச-201903:55:48 IST Report Abuse
kumziபாஸ் உச்சி மண்டையில உர்ருங்குது வெயர் இஸ் த பார்ட்டி அது நம்ம ஊரு பார்டினா தா புரியும் நீங்க வேற சார்...
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
12-டிச-201910:23:38 IST Report Abuse
TechTIt is clear and understandable....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X