அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் இன்று ( டிச.,11) வெளியிட்டது.







உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியீடப்பட்டது.


இதில்,பெண்களுக்கான பொது தொகுதிகள்:



* திருச்சி

* திருநெல்வேலி

* நாகர்கோவில்

* திண்டுக்கல்

* மதுரை

* கோவை

* ஈரோடு

ஆகிய மாநகராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


பொது தொகுதிகள்:

* சென்னை

* ஆவடி

* தஞ்சை

* ஓசூர்

* சேலம்

* திருப்பூர்

ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது.





தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலினத்தவர்களுக்காக (எஸ்.சி) பொது பிரிவிருக்கும் மற்றும் வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தவர்களுக்காக (பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.






முன்னதாக, உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் பின்னர், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடக்கும். வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் இட ஒதுக்கீடு அதன்படியே நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படியே, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தெரிவித்துள்ளது.


முதல்வர் ஆலோசனை


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர்களும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201905:55:51 IST Report Abuse
Ivan .... vachi irukanunga?
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
12-டிச-201905:19:17 IST Report Abuse
vasumathi வடக்கே பெண்களே இல்லையா ? ஆவடிய பெண்களுக்கு நெல்லையை ஆண்களுக்கும் மாற்றி இருக்கலாம்.
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
12-டிச-201909:47:27 IST Report Abuse
மூல பத்திரம் வேலூர் வடக்கிலில்லாமல் எங்கே இருக்கின்றது...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-டிச-201921:07:36 IST Report Abuse
ஆரூர் ரங் முஸ்லிம்கள் அதிகமுள்ள வேலூர் , கிறித்தவர்கள் அதிகமுள்ள தூத்துக்குடி எஸ் . சீ.க்களுக்கு ஒதுக்கீடு . அடுத்த வழக்குக்கு விஷயம் கெடச்சிருச்சு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X