விஜய் மல்லையா மீது பிரிட்டனில் திவால் வழக்கு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Mallya,London,court,Vijay_Mallya,மல்லையா,விஜய் மல்லையா

லண்டன்: இந்திய வங்கிகளின் கடன் மீட்பு நிறுவனம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவை தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, பிரிட்டனில் திவால் வழக்கு தொடுத்துள்ளது.

'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா, 10 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாமல் தப்பியோடி, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தக் கோரி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கடன் மீட்புக் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதையடுத்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, 2020, பிப்ரவரியில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை, திவால் ஆனவராக அறிவிக்கக் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில், கடன் மீட்புக் குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று(டிச.,11) விசாரணைக்கு வந்தபோது, கடன் மீட்புக் குழு சார்பில், வழக்கறிஞர் மாரிசியா சேகர் டெமியன் ஆஜரானார்.





அப்போது, ''20 ஆண்டு களாக லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையாவுக்கு, இங்கே, 380 கோடி ரூபாய் மதிப்பில் இரு பங்களாக்கள், மூன்று பாய்மரப் படகுகள், 'போர்ஸ் இந்தியா பார்முலா ஒன்' நிறுவன பங்குகள் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. ''எனவே, அவரை திவாலானவராக அறிவித்து, சொத்துக்களை முடக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் பிலிப் மார்ஷல், ''கடன் நிலுவைக்காக, விஜய் மல்லையா மீது, இந்தியாவில் வங்கிகள் வழக்கு தொடுத்துள்ள நிலையில், அதே கடனுக்கு, லண்டனில் திவால் மனு தாக்கல் செய்துள்ளதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, கேட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-டிச-201905:57:10 IST Report Abuse
blocked user காங்கிரஸ் இவனை ஒரு பொழுதும் திவாலாக விடாது. அப்படி நடந்தால் அது காங்கிரசின் முதுகெலும்பை உடைத்து போல்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-டிச-201905:11:47 IST Report Abuse
J.V. Iyer முன்பு இந்தியாவிலிருந்து செல்வத்தை கொள்ளை அடித்த பிரிட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் அரசு, இப்போது இந்தியாவில் கொள்ளை அடுத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது. இவர்களை பழிவாங்க அங்கு இருக்கும் பாகிஸ்தானியர்கள் போதும். நாட்டை துண்டாடிவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201901:51:51 IST Report Abuse
RS PRAKASH Thirutupayale
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X