திவாலான கொள்கைகள்!

Added : டிச 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement
திவாலான கொள்கைகள்!

வெங்காயம், பூண்டு சாப்பிடாத நிர்மலா சீதாராமனுக்கு, விலை உயர்வால் பிரச்னை இருக்காது. ஆனால், நாட்டு மக்களிடம் அடிக்கப்படும் கொள்ளைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, நிதி அமைச்சராக, அவருக்கு உள்ளது. இந்த விலை உயர்வால், விவசாயிகள் லாபம் அடைவதில்லை; இடைத்தரகர்கள் தான் பணக்காரர் ஆகின்றனர். உங்கள் கொள்கைகள் திவாலாகி விட்டன என்பதற்கு, இதுவே சான்று.
பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்

மோடிக்கு மாற்று ராகுல்!
காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் சக்தியாக திகழ்வது நேரு குடும்பத்தினர் தானே தவிர, அவர்கள் குடும்ப அரசியலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. மோடிக்கு நிகரான ஆளுமை கொண்ட தலைவர் இல்லை என, சொல்வது அபத்தம். மோடி மற்றும் அமித் ஷாவின் கருத்துகளுக்கு, துணிச்சலுடன் பதிலடி தரும் திறன், ராகுலுக்கு மட்டுமே உள்ளது. பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் என்றால், அது ராகுல் மட்டும் தான்.
அசோக் கெலாட், முதல்வர், ராஜஸ்தான்,

காங்.,தொடர வேண்டும் பணி!
ராமர் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய பின், உ.பி.,யில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு மற்றும் அமைதி பாதிக்கப்படாமல், சமூக நல்லிணக்கம், சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. இந்த சீரிய பணியை சிறப்பாக செய்த மத்திய - மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த மகத்தான பணி, வருங்காலத்திலும் தொடர வேண்டும்.
அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
12-டிச-201919:31:45 IST Report Abuse
karutthu மோடிக்கு மாற்று ராகுல் இது சரியாகவராது .முதலில் ராகுல் தன் திறமையை வெளிப்படுத்தவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201917:12:38 IST Report Abuse
Indian Dubai Who is Priyanka. OOHH. The great Vadra wife and she is still in politics?
Rate this:
Share this comment
Cancel
arvind - coimbatore,இந்தியா
12-டிச-201914:27:01 IST Report Abuse
arvind உங்க பாட்டி தன்னிரைவு திட்டம் கொண்டு வந்தாங்க.. 1991லேயே பணால்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X