பொது செய்தி

இந்தியா

400 சிக்சர் விளாசினார் 'ஹிட் மேன்' ரோகித்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019
Advertisement
INDvsWESTIND,hitman, Wankhede,rohit,Rohit,Rahul,KohlivsWilliams, rohit_sharma, ரோகித்சர்மா,

மும்பை: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் ஆனார் ரோகித் சர்மா.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் மோதியது. முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்து. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜடேஜா, சகால் நீக்கப்பட்டு முகமது ஷமி, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை.





இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. காட்ரெல் வீசிய போட்டியின் 3வது ஓவரின் முதல் பந்தை, ரோகித் சிக்சருக்கு அனுப்பினார். சர்வதேச அரங்கில் இவர் அடித்த 400வது சிக்சராக இது அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் ஆனார். தோனி (359) அடுத்த இடத்தில் உள்ளார்.

* சர்வதேச அளவில் 400 சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்தது. முதல் இரு இடங்களில் விண்டீஸ் வீரர் கெய்ல் (534), பாகிஸ்தானின் அப்ரிதி (476) உள்ளனர்.





* தவிர சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரோகித் (116) முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்தின் கப்டில் (113), விண்டீசின் கெய்ல் (105) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X