பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபாவில் சிவசேனா வெளிநடப்பு; அமித்ஷா கேள்வி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
CitizenshipAmendmentBill2019,Sanjay_Raut, Shiv_Sena,boycot_voting,Rajya_Sabha, சவசேனா,வெளிநடப்பு, பார்லிமென்ட்,லோக்சபா

புதுடில்லி: லோக்சபாவில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, ராஜ்யசபாவில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நேற்று முன் தினம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.,11) ராஜ்யசபாவிலும் 125 எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இம்மசோதாவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் ராஜ்யசபாவில் எதிர்த்தனர்.

இம்மசோதா மீதான விவாதத்திற்குபின் விளக்கமளித்து பேசிய அமித் ஷா, சிவசேனாவின் நிலைப்பாட்டை குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், 'நேற்று வரை இம்மசோதாவை ஆதரித்த சிவசேனா, இன்று எதிர்க்கிறது. ஒரு இரவுக்குள் என்ன நடந்தது என்பதை அவர்கள் மஹாராஷ்டிர மக்களுக்கு சொல்ல வேண்டும்' என்றார்.


latest tamil news
இதற்கு விளக்கம் அளித்து, ராஜ்யசபாவில் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் பேசுகையில், 'இம்மசோதாவை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும், ஆதரிப்பவர்கள் தேசப்பற்று கொண்டவர்கள் என்றும் கூறுவதாக நேற்று வரை கேள்விப்பட்டேன். எங்களது நாட்டுப்பற்று மற்றும் ஹிந்துத்வா கொள்கை குறித்து எங்களுக்கு எந்த சான்றிதழும் அளிக்க தேவையில்லை என்றார்.

இதனையடுத்து மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன், சினசேனா கட்சியின் 3 ராஜ்யசபா எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.


latest tamil news
வெளிநடப்புக்குப்பின் பேட்டியளித்த சஞ்சய் ராவத், 'மசோதா குறித்த சந்தேகங்களுக்கு முறையான பதில் கிடைக்காதபோது, அதனை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ சரியாக இருக்காது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என நாங்கள் கூறியதுஇல்லை. அவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக நடந்த சதி அல்லது குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவர்களுக்கு 25 ஆண்டுகள் ஓட்டுரிமை அளிக்கக்கூடாது. இந்திய மக்கள் தொகை மற்றும்இயற்கை வளங்களை வைத்து பார்க்கும்போது, எவ்வளவு மக்களை நாம் ஏற்று கொள்ள வேண்டும். இலங்கையில் வசிக்கும் தமிழ் ஹிந்துக்கள் குறித்து தெளிவுபடுத்தவில்லை. இதுபோல், நிறையவிஷயங்கள் உள்ளன. எங்கள் கட்சி முடிவால், மஹாராஷ்டிரா கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் வராது. எங்களின் கருத்தை நாங்கள் எடுத்துவைத்துள்ளோம். நாங்கள் சுதந்திரமான அரசியல் கட்சி என்றார். ' என்றார்.


தேசியவாத காங்., எம்.பி.,க்கள் ஆப்சென்ட்


இதேபோல், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.,க்கள் மஜீத் மேனன் மற்றும் வந்தனா சவான் 2 பேரும் குடியுரிமை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், ஒரு எம்.பி., உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு எம்.பி., வீட்டில் திருமணம் நடக்கிறது. இதனால், அவர்கள் பங்கேற்கவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-டிச-201922:14:45 IST Report Abuse
bal இவங்க அப்படித்தானே...ஒருத்தரோட நிச்சயதார்த்தம், ஒருத்தரோட கல்யாணம், மற்றொவரோட பிள்ளை குட்டி...
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
12-டிச-201912:24:04 IST Report Abuse
THENNAVAN அது அவங்க உள்கட்சி விவகாரம் ,25 கோடி கொடுத்தவன் சொல்லிட்ட்தான் ,ஆனால் பணத்தை வாங்கிய கம்ம்யூனிஸ்டுகள் எப்போதும் போல வாய் மூடிக்கிட்டு இருக்கிறார்கள் யோக்யர்கள்போல ,.இருந்தாலும் பணம் கொடுத்ததை வெளியே சொன்ன சுடலைக்கு ஒரிஜினல் ஜீன் வேலை செய்யுது .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
12-டிச-201910:50:57 IST Report Abuse
Rasheel இந்த நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக சகிப்பு தன்மை உள்ள நாடு. மத வெறியால் கொலை செய்யப்பட்ட பார்சிகளையும் யூதர்களையும் அரவணைத்த நாடு. ஆனால் இங்கு கொள்ளை அடிக்க கொலை செய்ய பெண்களின் மானம் பறிக்க வந்த துருக்கிய, ஆப்கானிய மற்றும் வங்காள கொள்ளையர்கள் இந்த நாட்டின் உப்பை தின்று இந்த நாடு மக்களையே அழிக்க கொண்டு வரும் வெடி குண்டு கலாச்சாரத்தை ஒழிக்க அவர்கள் கடைகளில் பொருள்கள் வாங்குவதை தவிர்ப்பதே நமது சந்ததியார் பாதுகாப்புக்கு நல்லது.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-டிச-201911:14:05 IST Report Abuse
Malick Rajaமனித மாண்பு ,மனிதபண்பற்ற இந்த கூப்பாடு சிலரால் பலவருடங்களாக சொல்லப்படுகிறது ஆனால் கேட்கவாய்ப்பில்லை காரணம் மனித நேயம் மிகுந்த நாடு நம்நாடு என்பதே பெரும்பான்மை மக்களின் எண்ணமாக இருக்கிறது .. வெகுசிலர் நல்ல மரத்தில் பில்லுருவிகளாக இருப்பதும் அவசியமே காரணம் அவர்களின் அழிநிலை .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X