சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை வசதி இல்லாததால் 'டோலி'யில் துாக்கி செல்லப்பட்ட சடலம்

Added : டிச 11, 2019
Advertisement
 சாலை வசதி இல்லாததால் 'டோலி'யில் துாக்கி செல்லப்பட்ட சடலம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, சாலை வசதி இல்லாததால், தொழிலாளியின் உடலை, அவரது உறவினர்கள், 'டோலி' கட்டி, மலைக்கு துாக்கிச் சென்று தகனம் செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை, 1,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, 150 குடும்பங்களைச் சேர்ந்த, 600 பேர் வசிக்கின்றனர். இங்கு சாலை, மின்சாரம், மருத்துவம் உட்பட, அடிப்படைவசதிகள் ஏதும் இல்லை.மருத்துவ சிகிச்சை பெற, 5 கி.மீ., நடந்து, வாணியம்பாடிக்கு செல்ல வேண்டும். பிரசவத்திற்கு, கர்ப்பிணிகளை டோலி கட்டி துாக்கிச் செல்லும் நிலை உள்ளது.இந்நிலையில், நெக்னாமலையைச் சேர்ந்தவர் ரஜினி, 27. அவரது மனைவி அனிதா, 25; மூன்று மாத கர்ப்பிணி.கோவையில் தங்கி, கட்டுமான பணி செய்தபோது, நேற்று முன்தினம், மின்சாரம் பாய்ந்து ரஜினி பலியானார்.

சாலை வசதி இல்லாததால், ரஜினியின் உடலை, நெக்னாமலைக்கு, டோலி கட்டி துாக்கிச் சென்றனர். துக்கம் தாளாமல் மயக்கமடைந்த அனிதாவையும், மற்றொரு டோலி கட்டி, மலைக்கு துாக்கிச்சென்றனர்.நேற்று மதியம், 12:00 மணிக்கு, ரஜினியின் உடல், நெக்னாமலையில் தகனம் செய்யப்பட்டது.திருப்பத்துார் கலெக்டர் சிவனருள் கூறுகையில், ''வருவாய்த் துறை சார்பில், நெக்னாமலைக்கு சாலை அமைக்க, இடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், வனத்துறை சார்பில் சாலை அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X