பெண் கொலை வழக்கு குற்றவாளி கைது

Added : டிச 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே, பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, தலைமறைவுகுற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி லட்சுமி, 40. இவர், ஜூன், 27ம் தேதி, பாடிப்பள்ளம் காப்புக்காட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணையில், திண்டிவனம் அடுத்த ரெட்டணையைச் சேர்ந்த செங்கேணி, 42,
 பெண் கொலை வழக்கு குற்றவாளி கைது

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே, பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, தலைமறைவுகுற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி லட்சுமி, 40. இவர், ஜூன், 27ம் தேதி, பாடிப்பள்ளம் காப்புக்காட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணையில், திண்டிவனம் அடுத்த ரெட்டணையைச் சேர்ந்த செங்கேணி, 42, என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது.செங்கேணி, சின்னாலுாரில் வசித்து வரும், தன் அக்கா ராணி, 45, வீட்டிற்கு செல்லும்போது, லட்சுமியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று நடந்த தகராறில், செங்கேணி,கட்டையால் அடித்து, லட்சுமியை கொலைசெய்துள்ளார்.

பின், அக்கா ராணி, மாமா ஏழுமலை ஆகியோரது உதவியுடன், இருசக்கர வாகனத்தில், சடலத்தை எடுத்துச் சென்று, பாடிப்பள்ளம் காப்புக்காட்டில் வீசியுள்ளார்.கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, கொலை நடந்த அன்றே, சின்னாலுாரைச் சேர்ந்த ஏழுமலை, 70, அவரது மனைவி ராணிஆகியோரை, போலீசார் கைது செய்தனர்;செங்கேணியை தேடி வந்தனர்.இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு, செங்கேணியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
17-டிச-201917:35:25 IST Report Abuse
atara This is called Barbarian mind public need common sense how to live and how not to harm others for selfish need. Some thing wrong in Family DNA tem.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X