சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.800 கோடி ஏப்பம் விட்ட நிறுவனம் பணத்தை திரும்ப பெற திரண்ட மக்கள்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை: யு.டி.எஸ்., நிதி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த, 2,000த்துக்கும் மேற்பட்டோர், நேற்று கோவை கோர்ட் வளாகத்தில் திரண்டனர்.கோவை, பீளமேட்டில், யு.டி.எஸ்., எனும், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்' நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தில், 'டிபாசிட்' செய்தால், ஒரே வருடத்தில், இரட்டிப்பு தொகை தருவதாகவிளம்பரப்படுத்தினர்.மனு தாக்கல்முதலீடு செய்தவர்களுக்கு, சில மாதங்கள்
 ரூ.800 கோடி ஏப்பம் விட்ட நிறுவனம் பணத்தை திரும்ப பெற திரண்ட மக்கள்

கோவை: யு.டி.எஸ்., நிதி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த, 2,000த்துக்கும் மேற்பட்டோர், நேற்று கோவை கோர்ட் வளாகத்தில் திரண்டனர்.

கோவை, பீளமேட்டில், யு.டி.எஸ்., எனும், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்' நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தில், 'டிபாசிட்' செய்தால், ஒரே வருடத்தில், இரட்டிப்பு தொகை தருவதாகவிளம்பரப்படுத்தினர்.மனு தாக்கல்முதலீடு செய்தவர்களுக்கு, சில மாதங்கள் வட்டி கொடுத்த நிறுவனத்தினர், டிபாசிட் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்தனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், தமிழகம், கேரளாவில் உள்ள, 16 கிளைகள் மூலம், 70 ஆயிரம் பேரிடம், 800 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் பெற்று, மோசடி செய்தது தெரிந்தது.பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக, சென்னை ஐகோர்ட்டில், நிறுவனம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி, கே.என்.பாஷா தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.விண்ணப்பம்கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு, டிபாசிட்தாரர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.டிபாசிட்தாரர்கள், 2,000த்துக்கும் மேற்பட்டோர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று திரண்டனர்.

டிபாசிட்தாரர்கள் கூறுகையில், 'ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு, பணத்தை திருப்பி தருவது தொடர்பாக, பாதிக்கப்பட்ட எங்களுக்கு, யு.டி.எஸ்., எந்த தகவலும் தரவில்லை. அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என்றனர்.யு.டி.எஸ்., தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'இது குறித்து, முறையான பொது அறிவிப்பு வெளியிடப்படும். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே, பணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-டிச-201921:37:52 IST Report Abuse
Sampath Kumar கோவை மக்கள் தான் பேராசை பிடித்த மக்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-டிச-201911:03:17 IST Report Abuse
Malick Raja அட போங்கப்பா .. எவ்வளவுதான் சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் இப்படி அறிவிழந்து அவலாசை காரணமாக இழப்பை எதிர்கொள்கிறார்கள் .. உழைத்து சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் 90%.இருக்கும் ஒரே நாடு நமது இந்தியா.. காரணம் பலவும் சொல்லலாம் அதில் முழுமுதல் காரணம் அரசியல் கட்சிகள் ,சினிமா இரண்டு மட்டுமே ..
Rate this:
Rohin - jk ,இந்தியா
14-டிச-201915:12:48 IST Report Abuse
Rohinஅப்போ பாக்கிஸ்தானில எப்படி, 100% பேர் உளச்சு, உளச்சா அல்ல குண்டு வெச்சு, குண்டு வெச்சா...
Rate this:
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
13-டிச-201923:24:02 IST Report Abuse
M.Guna Sekaran இதே மாதிரி பி.எ.சி.ல் நிறுவனதிடம் ஏமாந்தவர்கள் ஏராளம் அதற்கு மோடி அரசும் பொறுப்பு யாரு பறி கொடுத்த பணத்தை வாங்கி கொடுப்பர் ,எப்போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X