கோவை: யு.டி.எஸ்., நிதி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த, 2,000த்துக்கும் மேற்பட்டோர், நேற்று கோவை கோர்ட் வளாகத்தில் திரண்டனர்.
கோவை, பீளமேட்டில், யு.டி.எஸ்., எனும், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்' நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தில், 'டிபாசிட்' செய்தால், ஒரே வருடத்தில், இரட்டிப்பு தொகை தருவதாகவிளம்பரப்படுத்தினர்.மனு தாக்கல்முதலீடு செய்தவர்களுக்கு, சில மாதங்கள் வட்டி கொடுத்த நிறுவனத்தினர், டிபாசிட் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்தனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், தமிழகம், கேரளாவில் உள்ள, 16 கிளைகள் மூலம், 70 ஆயிரம் பேரிடம், 800 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் பெற்று, மோசடி செய்தது தெரிந்தது.பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக, சென்னை ஐகோர்ட்டில், நிறுவனம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி, கே.என்.பாஷா தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.விண்ணப்பம்கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு, டிபாசிட்தாரர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.டிபாசிட்தாரர்கள், 2,000த்துக்கும் மேற்பட்டோர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று திரண்டனர்.
டிபாசிட்தாரர்கள் கூறுகையில், 'ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு, பணத்தை திருப்பி தருவது தொடர்பாக, பாதிக்கப்பட்ட எங்களுக்கு, யு.டி.எஸ்., எந்த தகவலும் தரவில்லை. அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என்றனர்.யு.டி.எஸ்., தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'இது குறித்து, முறையான பொது அறிவிப்பு வெளியிடப்படும். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே, பணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE