பொது செய்தி

இந்தியா

ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
INDvWI,TeamIndia,INDvsWI,t20,India,Mumbai,cricket,மும்பை,கிரிக்கெட்,இந்தியா,விண்டீஸ்,won

மும்பை: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் மோதியது. முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. காட்ரெல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ரோகித், அடுத்து சிக்சர், பவுண்டரி என விளாசினார்.





மறுபக்கம் ராகுல், தன் பங்கிற்கு ஹோல்டர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்தார். வில்லியம்ஸ், பியர்ரே என ஒருவரையும் இந்த ஜோடி விட்டு வைக்கவில்லை. முதல் 6 ஓவரில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது. அடுத்து பியர்ரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரோகித், சர்வதேச 'டுவென்டி-20'ல் 19வது அரைசதம் எட்டினார். இந்திய அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 102 ரன்களை எட்டியது. ரோகித் 71 ரன் எடுத்தார். ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டானார்.

மறுபக்கம் ராகுல், கோஹ்லி அரைசதம் அடித்தனர். ராகுல் 91 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. கோஹ்லி (70), ஸ்ரேயாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.


அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு போலார்டு (68), ஹெட்மயர் (41) தவிர மற்றவர்கள் ஏமாற்றினர். விண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 67 ரன்னில் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை தட்டிச் சென்றது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை கேப்டன் கோஹ்லி தட்டிச்சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-201909:11:24 IST Report Abuse
ஸாயிப்ரியா மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X