சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அப்பட்டமான அரசியல் பாகுபாடு!

Added : டிச 11, 2019
Share
Advertisement
 அப்பட்டமான அரசியல் பாகுபாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சி காலத்தில், தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 'புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், முந்தைய காங்., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர்கள், உடனடியாக அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும்' என, அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் சிலர், 'இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க' என, கேட்டபோதும், 'அதெல்லாம் முடியாது' என, கறார் காட்டினார் வெங்கையா. தற்போதைய அரசில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக, பா.ஜ.,வின் ஹர்திப் சிங் புரி பொறுப்பேற்றதும், ஏற்கனவே வெங்கையா நாயுடு பிறப்பித்தது போன்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால், மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்று, தற்போதைய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படாத பலரும், கலக்கம் அடைந்தனர்.

இந்த விஷயத்தில், வெங்கையா போல், ஹர்திப் சிங் பூரி கடுமை காட்டவில்லை. பொறுமையை பின்பற்றுகிறார். இதனால், முன்னாள் அமைச்சர்கள் பலரும், அவரை பாராட்டுகின்றனர். காங்கிரஸ் பிரமுகர்களோ, 'வெங்கையா அமைச்சராக இருந்தபோது, எங்கள் கட்சியினர் தான், முன்னாள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களை காலி செய்வதற்கு, அவர் அவசரம் காட்டினார். இப்போது முன்னாள் அமைச்சர்கள் பலரும், பா.ஜ.,வினர். அதனால் தான், ஹர்திப் சிங் பூரி கருணை காட்டுகிறார். இது அப்பட்டமான அரசியல் பாகுபாடு' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X