பாக்.,கை போல் பேசும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி கடும் தாக்கு

Updated : டிச 13, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (19+ 14)
Advertisement
Pakistan,Modi,பாக்,எதிர்க்கட்சிகள்,பிரதமர்,மோடி,தாக்கு

புதுடில்லி : குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில், பாகிஸ்தானைப் போல, எதிர்க்கட்சிகள் பேசி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்த சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க வழி செய்யும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேறியது.


எதிர்ப்பு


இதற்கு, காங்கிரஸ், தேசியவாத காங்., திரிணமுல் காங்., தி.மு.க., சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இம்மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்படுவதற்கு முன், பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம், நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக இங்கு குடியேறிய சிறுபான்மையின மக்கள், நீண்ட நாட்களாகவே, ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


கட்டுக் கதைகள்


இந்த மசோதா குறித்து, எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் கட்டுக் கதைகளை உடைத்து, இதன் உண்மையான பயனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது, உறுப்பினர்களின் கடமை.இந்த விவகாரத்தில், பாகிஸ்தானைப் போல, எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


பாரதிக்கு புகழாரம்!


மகாகவி சுப்ரமணிய பாரதியின், 137வது பிறந்த நாள், நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:மகாகவி பாரதி, நாட்டுப்பற்று, சமூக சீர்திருத்தம், சுதந்திர உணர்வு, அச்சமின்மை, கவிதையில் மேதமை ஆகியவற்றின் முழு உருவமாக வாழ்ந்தவர். அவரது சிந்தனைகளும், படைப்புகளும், காலம் உள்ள வரை அனைவருக்கும் ஊக்கம் தரும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.


எடியூரப்பாவுக்கு வாழ்த்து!பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ., - எம்.பி.,க்கள் குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்து, ஆறு மாதங்கள் முடிவடைந்ததற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது இடைமறித்த பிரதமர், கர்நாடகாவில், 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பா.ஜ., அரசு, 12 இடங்களில் வெற்றி பெற, கடுமையாக உழைத்த, மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு கூறினார். இதையடுத்து, உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி, எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
12-டிச-201912:22:23 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு குடியுரிமையைப் பெறுவதற்கு நாட்டில் வசிக்க வேண்டிய காலம் 11 ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்த மசோதாவானது சட்ட விதிகளின்படி அனைவருக்கும் பொதுவானதாக அன்றி சிலருக்கு மட்டுமே சலுகை காட்டுவதாக அமைந்துள்ளது. மேலே சொல்லப்பட்டதுபோல, அரசமைப்புரீதியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வரவில்லை. ஆனால், குதர்க்கமான அரசியல் தர்க்கம் அதில் இருக்கவே செய்கிறது. சட்டத்தின்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது. இது அரசமைப்புக்கு ஒவ்வாத சட்டம் என்று நீதித் துறை வலியுறுத்திக் கூற வேண்டும். அப்படிச் செய்யாமல்போனால், இது முடிவாக அல்ல இதுபோன்ற சட்டரீதியான நகர்வுகளுக்கு இது தொடக்கமாகவே அமையும். காலப்போக்கில் நாம் அறிந்த அரசமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-டிச-201910:46:55 IST Report Abuse
ganapati sb எடியூரப்பா தேவேந்திர பெட்னவிஸ் மனோகர் கட்டார் அமித்சா ராஜ்நாத் நிர்மலா பியூஸ் கோயல் நிதின் கட்கரி என உழைப்பவருக்கு உரிய பதவி அங்கீகாரம் கொடுக்கும் மோடிக்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
classic_indian - mumbai,இந்தியா
12-டிச-201909:50:09 IST Report Abuse
classic_indian Naalaiku Hindu yennum porvaikul nulaindhu theeviravaadhigal ingu vara maatargal nu yennada nichayam.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X