ஏழைகளின் ரத்தத்தை டாக்டர்கள் உறிஞ்சுகின்றனர்; எடியூரப்பா கோபத்தால் பரபரப்பு

Updated : டிச 13, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (16)
Advertisement
எடியூரப்பா,டாக்டர்கள்,பரபரப்பு

பெங்களூரு : ''மக்களின் வரிப்பணம், மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, படித்த பின், டாக்டர்கள், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க தவறக் கூடாது. டாக்டர்கள், ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர்,'' என முதல்வர் எடியூரப்பா, கண்டிப்புடன் அறிவுறுத்தினார். இது, டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக துணை முதல்வராக, ஆக., 26ம் தேதி, அஸ்வத் நாராயண் பதவி பெறுப்பேற்றார். அவர் பதவியேற்று, டிச., 3ம் தேதியுடன், 100 நாள் நிறைவடைந்தது. இதனால், 100 நாட்களில், தனக்கு ஒதுக்கிய மருத்துவ கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் செய்த சாதனை கொண்டாட்டத்தை, நேற்று நடத்தினார்.பெங்களூரு அரண்மனை சாலையிலுள்ள, ஞானஜோதி அரங்கில் நடந்த நிகழ்ச்சியை, முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்து பேசியதாவது:பா.ஜ., அரசு மீது வைத்த நம்பிக்கையை, அபிவிருத்தி செய்வதன் மூலம் காட்டுவோம்.

மனித வளத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும், மருத்துவ கல்லுாரி மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை மற்றும் கட்டணத்தை குறைக்கும்படி, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஊக்கத்தொகை


அடுத்தாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், ஊக்கத்தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படும். ஆனால், அரசு வழங்கும் கல்வி தொகையில் படிக்கும் டாக்டர்கள், கிராமங்களில் பணிபுரிய மறுப்பதே வேதனையளிக்கிறது.

கர்நாடகத்தில் படித்து, வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். டாக்டர்கள் எப்போது, கிராமங்களில் பணிபுரிகின்றனரோ, அன்று தான், அவர்களின் கடமை தீரும்.கிராமங்களில் சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் பாதிக்கப்படுவதை, என்னால் பார்க்க முடியவில்லை.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளிடம் விசாரித்தால், பாதி பேர், டாக்டர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். டாக்டர்கள், ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர். நான் சொல்கின்றேன் என, தவறாக நினைக்க வேண்டாம் .

உண்மை நிலவரத்தை கூறுகிறேன். அரசு மருத்துவமனைகள் சேவை தரம் உயர்த்தப்படும்.மக்கள் வழங்கிய வரிப்பணம், மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, படித்த பின், டாக்டர்கள், ஏழைகளின் நலனுக்காக சிகிச்சை அளிக்க தவறக்கூடாது. சொந்த நாட்டில் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முதல்வரின் பேச்சு, டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவியர் பகீர் குற்றச்சாட்டு


பெங்களூரு பல்கலையில், எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும், மாணவி நந்தினி பேசுகையில், ''சர்வதேச தரத்தில், கல்வி வழங்க வேண்டும். பெங்களூரு பல்கலையில், கட்டடம் சரியாக இல்லை. நுாலகத்தில், புத்தகங்கள் இல்லை. பாடம் சொல்லி கொடுக்க பேராசிரியர்களே இல்லை,'' என்றார்.

கிம்ஸ் அரசு மருத்துவமனையில், முதுகலை மருத்துவ கல்வி படிக்கும் மாணவி சவிதா பாட்டீல், பேசுகையில், ''எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கட்டணம் அதிகம். ஆனால், கல்வி ஊக்கத்தொகை குறைவு. எங்களுக்கு பாதுகாப்பு தேவை,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
12-டிச-201919:47:22 IST Report Abuse
Anantharaman Srinivasan இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே மக்கள் வரிப்பணத்தையும், அரசு கஜானாவையும் சுண்டுபவர்கள்தான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. சென்ற ஆட்சியில் ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து செய்தது என்ன? சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி இருக்கலாம். மனசாட்சியை தட்டி எழுப்பி உண்மையை சொல்லு...
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
12-டிச-201919:43:17 IST Report Abuse
R chandar This question is correct when students studied under government colleges if they study under private colleges their fees structures are different as such they are spending their own funds by paying higher fees when compare to government college and coming out as doctor, so government should arrange for all students studied in government colleges with nominal fees by ing and accomodating more students in government colleges and then ask this question otherwise make a law to students studied in government colleges should work only in govenment hospitals and do services to people.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
12-டிச-201914:39:18 IST Report Abuse
Divahar மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி பின் தேர்தல் வைத்து மக்கள் பணத்திற்கு அதிக இழப்பை அரசியல்வாதிகளும் செய்கிறார்கள் . மருத்துவர்களும் , அரசியல்வியாதிகளும் ஒருமாதிரியாகத்தான் செயல்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X