ஹபீஸ் சயீது மீது குற்றச்சாட்டு பதிவு

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஹபீஸ் சயீது,. குற்றச்சாட்டு பதிவு

லாகூர்: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, ஜமா உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மீதான, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்த வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, ஹபீஸ் சயீது, பாகிஸ்தானில் உள்ளார். 'வழக்கின் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும்' என, இந்திய அரசு தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், பாக்., அதை மறுத்து வருகிறது.





ஜமா உத் தாவா மற்றும் ஹபீஸ் சயீதுக்கு, ஐ.நா., ஏற்கனவே தடை விதித்துள்ளது.இந்நிலையில், பாக்., கின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத்தை துாண்டி விட பண உதவி செய்ததாக, ஹபீஸ் சயீது மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது, லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இம்மாதம், 7ம் தேதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக இருந்தது.ஆனால், சயீதின் ஒரு கூட்டாளி ஆஜராகவில்லை. ஹபீஸ் சயீது மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.அதையடுத்து, பயங்கர வாதத்துக்கு பண உதவி செய்த வழக்கில், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12-டிச-201909:05:08 IST Report Abuse
Subramanian Arunachalam விசாரணை முடிந்தவுடன் இவருக்கு பாகிஸ்தானின் மிக சிறந்த குடிமகன் விருது அளிக்கப்படும் அமைதிக்கான நோபல் விருதுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்வார்கள் நம் நாட்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் காட்சிகள் அதை வழி மொழிவார்கள்
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
12-டிச-201914:03:31 IST Report Abuse
Rohinஇதற்கு கண்டனம் தெரிவித்து நம்ம ராவுல், சுடலை, கருப்பு துண்டு, சவடால் குருமா, ஓசி சோறு கோழை மணி போன்ற தலீவர்கள் இஸ்லாமாபாத் சென்று கண்டன போராட்டம் நடத்த இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201908:45:26 IST Report Abuse
sekar ng இந்துக்களை படுகொலை செய்வதுதான் முஸ்லீம் கட்சிகளின் மனித நேயம். பாம்பே தாக்குதலுக்கு இனிப்பு வழங்கிய மனிதநேய கட்சிகள்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-டிச-201904:53:03 IST Report Abuse
J.V. Iyer ஹபீஸ் சயீது பாகிஸ்தானை அழிக்கும்போதுதான் தான் தெரியும் அவர்கள் செய்த தவறுகளை. கூடிய சீக்கிரம் தானும் அழிவான். தீவிரவாதிகளின் சொர்கம் பாக்கிஸ்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X