பா.ஜ., போட்டியை சமாளிக்க சிலைகள் நிறுவும் திரிணமுல்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
mamta_banerjee,mamta,BJP,Bharatiya_Janata_Party,பாஜ

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், அதன் ஹிந்துத்துவா கொள்கைக்கு போட்டியாக, மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் சிலைகளை நிறுவும் முயற்சியில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், கடந்த சில ஆண்டுகளாக, மாநிலத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது. அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல், அதற்கடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை, மேற்கு வங்கம் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியில், திரிணமுல் காங்., ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: ஹிந்துத்துவா கொள்கையின் மூலம், மாநிலத்தில் பா.ஜ., வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை சமாளிக்கும் வகையில், மாநிலத்தின் பெருமையை, மதச்சார்பின்மையை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். இதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் சிலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.


latest tamil news



சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோரின் சிலைகளை ஆங்காங்கே நிறுவ உள்ளோம். தற்போது கோல்கட்டாவில், 30 சிலைகள் நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சிலையை அமைக்க, 20 - 30 லட்சம் ரூபாய் செலவாகிறது. கட்சியினர் நிதி திரட்டி, சிலைகளை நிறுவி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12-டிச-201921:43:36 IST Report Abuse
Vijay D Ratnam மேடம் உங்களை யாரோ தவறாக வழிநடத்தி கொண்டு இருக்கிறார்கள். மே பி பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ. ஒருத்தருக்கு அழிவுகாலம் ஸ்டார்ட் ஆகிவிட்டதென்றால், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தப்புத்தப்பாகவே முடியும். பாஜகவின் டார்கெட் வெரி சிம்பிள். அவர்கள் இஸ்லாமிய வாக்குகளை, கிருஸ்தவ வாக்குகளை எதிர்பார்ப்பதில்லை. கிடைத்தால் சந்தோசம், கிடைக்கவில்லையா நோ ப்ராப்ளம். அவர்களின் டார்கெட் ஹிந்துவாக்குகள்தான். அது அவர்களுக்கு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. அவர்களின் 2024 பாராளுமன்ற தேர்தலின் டார்கெட் 42 - 45 பர்சென்ட் நிச்சயம் அது சாத்தியம். நீங்கள் விவேகானந்தர் சிலையையும், சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலையையும் வைத்தால் அதுவும் பாஜவுக்குத்தான் ஃபேவராக போகும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-டிச-201916:18:01 IST Report Abuse
Endrum Indian சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு என்ற பாடலை தான் கேவிப்பட்டேன் ஆனால் இந்த அளவுக்கு இந்த சின்ன பெண் முஸ்லீம் பேகம் மும்தாஜ் (வயதில் அல்லவே அல்ல) சிலை எடுக்க ஆர்பித்து விட்டாளா???நான் வரும் வழியில் ஒரு 8 அடி ரபீந்திரநாத் தாகூர் சிலை அசிங்கப்பட்டு இருக்கின்றது, அதை கவனிப்பார் யாருமேயில்லை இத்தனைக்கும் அது வைத்து 2 வருடம் கூட இருக்காது. விரதத்துக்கு ஒருதடைவையாவது அதை சுத்தம் செய்தார்கள் என்ரை அதை பராமரிக்கின்றார்கள் என்று அர்த்தம். 2 வருடம் ஆகி விட்டது இன்று வரை ஒன்றுமே செய்யவில்லை???அப்புறம் எதுக்கு சிலை வைக்கணும்???இதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை??ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது .
Rate this:
Cancel
12-டிச-201915:41:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிலை நிறுவினால் மட்டும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X