ஐதராபாத் என்கவுன்டர் வழக்கு மாஜி நீதிபதி விசாரணை?| Dinamalar

ஐதராபாத் 'என்கவுன்டர்' வழக்கு 'மாஜி' நீதிபதி விசாரணை?

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (7)
ஐதராபாத் 'என்கவுன்டர்' வழக்கு 'மாஜி' நீதிபதி விசாரணை?

புதுடில்லி: ஐதராபாதில் பாலியல் பலாக்கார குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை போலீசார் 'என்கவுன்டரி'ல் சுட்டுக் கொன்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிவிசாரிக்க உள்ளார்.ஐதராபாதில் சமீபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை போலீசார்என்கவுன்டரில் சுட்டுத்தள்ளினர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சமூகஆர்வலர்களான ஜி.எஸ்.மணி பிரதீப் குமார்யாதவ் ஆகியோரும் வழக்கறிஞர் எம்.எல். சர்மாவும் இரு பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.அவற்றில் 'குற்றம்சாட்டப்பட்டோருக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுத் தராமல் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு தற்காப்புக்காக சுட்டதாக நாடகம் ஆடும் போலீசார் மீது விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்குவந்தது.அப்போது அவர் ''இந்த வழக்கில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின்கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்; இவ்வழக்கு விசாரணையை டில்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது'' என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X