பொது செய்தி

இந்தியா

ஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபைக்கான 3 ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வரும் தேர்தலில், பாதுகாப்பு பணியில் 40,000 க்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.






81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் நவ.,30 ம் தேதியும், 2 ம் கட்ட தேர்தல் டிச.,07 ம் தேதியும் நடைபெற்ற நிலையில் 3 ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 17 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். 4 ம் கட்ட தேர்தல் டிச.,16 அன்றும், 5 ம் கட்ட தேர்தல் டிச.,20 அன்றும் நடைபெற உள்ளன. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிச.,23 அன்று எண்ணப்பட உள்ளன.





இன்றைய தேர்தலில் 32 பெண் வேட்பாளர்கள் உள்ளிட்ட 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 56 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இன்று ஓட்டளிக்க உள்ளனர். போலீசார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 40,000 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
12-டிச-201908:56:08 IST Report Abuse
Allah Daniel இருந்த ஹிந்துக்களை எல்லாம் அடித்து துரத்திவிட்டு, இப்ப வந்து பாக்கனுமா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X