அமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச அமைச்சர்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (106)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டாக்கா : அமித்ஷா வங்கதேசத்தில் சில மாதங்கள் இருந்து பார்த்தால், எங்கள் நாடு மத நல்லிணைக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையே இந்திய பார்லி.,யின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு அண்டை நாடான பாக்., ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வங்கதேசமும் தற்போது தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மத ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென், மத சார்பின்மை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக சகிப்புத்தன்மை கொண்ட நாடு என இந்தியாவை வரலாறு போற்றுகிறது. ஆனால் இந்த மசோதாவால் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழக்கும். மத நல்லிணக்கம் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படும் சில நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் வந்து சில மாதங்கள் வாழ்ந்தால், மத நல்லிணக்கத்திற்கு எங்கள் நாடு முன்னுதாரணமாக திகழ்வதை காண்பார்.

இந்தியாவிற்குள் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவர்கள் அதை சரி செய்ய போராடட்டும். எங்களை பற்றி அவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. நட்பு நாடு என்ற முறையில், எங்களுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலான எந்த செயல்பாட்டையும் இந்தியா மேற்கொள்ளாது என நம்புகிறோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201921:18:05 IST Report Abuse
Suresh Gurusamy பாகிஸ்தான்,பங்களாதேஷ் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை இந்த சட்டத்தால்....உங்கள் நாட்டில் வாழ்வதுக்கு பிடிக்காத ஹிந்து, கிறிஸ்டியன்,சீக்கியர் அவர்களுக்கு நாங்கள் எங்கள் நாட்டில் குடியுரிமை கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை.....இஸ்லாமிய நாட்டின் இஸ்லாமிய குடிமக்களை அழைத்து நாங்கள் குடியுரிமை கொடுத்தால் நீங்கள் பேசுவதில் ஒரு அர்த்தம் உள்ளது.உங்கள் நாட்டில் உங்கள் மதம் அழிந்து விடும் என்று பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது...இந்தியாவில் சிலர் தறி கெட்டு பேசுகிறார்கள் அவ்வளவு தான்...
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
15-டிச-201911:11:25 IST Report Abuse
Sukumar Talpady வங்கதேசத்தில் மதநல்லிணக்கணம் இருந்தால் ஏன் சகமாஸ் (Chammaas) என்னும் பழங்குடியினர் ஆயிரக்கணக்கில் சிட்டகாங் மாவட்டத்திலிருந்து இந்தியாவுக்குத் துரத்தப் பட்டனர் ? அவர்களை எல்லாம் திரும்ப அழைப்பாரா ?
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
14-டிச-201921:26:59 IST Report Abuse
adithyan இங்கு யாரும் வாருங்கள் என்று அழைக்கவில்லை. ஏற்கனவே அடிபட்டு அகதிகளாக வந்தவர்களை சீராக்கவே இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. நடுநிலையில் இல்லாத சில புறம்போக்கிகள் தவறாக பேசுவதை கேட்டு இவர் உளறுகிறார். போருக்கு பின் ஓடிவந்த அணைத்தது இஸ்லாமியர்களுக்கு அந்த சமயத்தில் குடியுரிமை ரேஷன் கார்ட் முதலானவை வழங்கப்பட்டுள்ளன.அதுவும் மே வங்காளத்தில் ஜ்யோதி பசு காலத்தில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X